ஏழை வயிறு எரியுது

விவசாயம் வளமின்றி வீழ்ந்து கிடக்குது -அதை
விவரம் கெட்ட அரசாங்கம் பார்த்து நிற்குது
அவசியமாய் அதனை எண்ணி காக்க நினைகல-அவர்
கவலையினை தீர்த்திடவும் முயன்று பார்கல !

போராடும் உழவன் துயர் போக்க துடிக்கலை-அவன்
போராடும் காரணத்தை இன்னும் கேட்கல !
ஏரோட்டும் ஏழை மனம் அறியத் தெரியல-அவன்
ரோட்டோரம் கிடப்பதனைக் காணத் துணியல !

புல்லைத் தின்னு பார்த்துட்டான் – செத்த
எலியைத் தின்னு பார்த்துட்டான்
பாம்புக் கறி தின்னுட்டான் –தெருவில்
படுத்துக் கூட கிடந்துட்டான்

பசிக்கு உணவு படைத்தவன –ஒரு
பாவமுன்னு எண்ணல
ருசித்து ருசித்து தின்ன வாயி –ஒரு
வருத்தம் கூட சொல்ல................................
என்ன இது சுதந்திரம் எதுக்கு இந்த சுதந்திரம்
எண்ணிப் எண்ணி பார்க்கையில ஏழை வயிறு எரியுது.........

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (21-Sep-17, 9:25 pm)
பார்வை : 73

மேலே