கனவு கன்னியை நேரில் கண்டு ஒரு காதலன் பிதற்றல்
கண்ணே கண்மணியே
என் கனவுலகு காரிகையே,
இதோ, இங்கே, உன்னை
நேரில் கண்டுவிட்டேன்;
இதை எப்படி சொல்வேன்?
என் ஜென்ம சாபல்யமா ?
இன்னும் என்ன சொல்லவேண்டும்
என்று தெரியாது இன்பத்தின்
உச்சத்தில் இருக்கின்றேன்
பெண்ணே, நீதான், என் காதலி
காலமெல்லாம் உன் காலடியில்
உன் காதலனாய் என்னை,
என் மனதை, அர்பணிப்பேன்
இது வெறும் உதட்டில் வரும்
சொல்லல்ல , ஆத்மார்த்தமான
வாய்வழியாய் வரும் உண்மைச்சொல்;
காலம்தான் இதற்க்கு நிரூபணம் .
என்னை நம்பிடுவாய் என் கனவு கன்னியே
என்னவளாகிவிடு; உயிருள்ளவரை -உன்னை
என் கண்போல் காத்துநிற்பேன்
உன்னவனாய் மட்டுமே உந்தன் கண் அவனாய்
நீ விரும்பும் மணாளனாய், கணவனாய்..