மிஸ்கின்

என்னவனை தேடி ஒரு பயணம்..!

பணியிடத்தின் போது.

அக்கருப்பு கண்ணாடிக்குள் தென்படாத
அவன் கண்களில் இருந்து விழுந்த கோபம் அது..!
என்னுள் காதலாய் அன்ற்றொரு நாள்..!

மேலாளரின் வற்புறுத்தலுக்கு இணங்க
ரசீது தாளில் அவன் கைய்யொப்பம் கிடைக்க..

கைபேசியின் பெருத்த சத்தத்துடன்
அவன் கால்கள் அங்கும் இங்குமாய்..
ரசீது தாளை ஏந்தி நெருங்கிய எனக்கு
கிடைத்தது என்னமோ !!!!!!

அவனின் உதவியாளர்களுடன் உரையாடலும்
அவ்விடுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை
கிடைத்த பயணமும் மறக்க முடியாத நினைவுகள்..!

அவனை பற்றிய தேடலில் கிடைத்தது
சினிமா மட்டும் அல்ல..அதீத காதலும்..
வாழ்க்கையின் புரிதலும்தான்..!

அவனிடம் தஞ்சம் புக
காதல் மட்டும் போதாது என
அனுபவம் தேடி அலைந்து திரிந்து ஏழு வருடத்திற்கு பின்
மதராச பட்டினம் வந்தடைந்தேன் !

அவன் அலுவலக முகவரி கிடைத்தும்
அவன் மேலாளரின் கைபேசி உரையாடலுக்கு பின்பும்
அவனை மட்டும் இன்னும் பார்க்க முடியவில்லை!!

காதலோடு காத்திருக்கிறேன்
இந்நாள் வரை இணையதளத்தில்
அவனின் கொடுங்கோப பேச்சுகளையும்
காதல் கதிர்வீச்சுகளையும்
தன்னந் தனிமையில் ரசித்தவாறு !
ஒரு துப்பறிவாளனாய் !!

பெண்மையை வணங்கி
இசையை உண்பவன்
புத்தக பிரியன்
புத்தனின் புதல்வன்
வித்தக கவிபாடும்
பித்துக் கவிஞன்

தேடலை கொண்டு திரைப்படம்
கொடுத்தவன்..
காதலோடு அவன் கால்தடம் தேடி
இன்னமும் சிறியதாய்
துப்பு கிடைக்காத நானோ இங்கொரு
துப்பறிவாளன் !
பெயர் சதுர்த்தி.. யாதும் அனுபவம்.. யாவரும் கேளிர் !!!

எழுதியவர் : சதுர்த்தி (22-Sep-17, 8:21 am)
பார்வை : 117

மேலே