என் உயிரே

என் உயிரே...

தனிமையை தவிர்த்திட
தஞ்சம் புகுந்தேன்
வாசிப்பினுள்...

படித்ததும்,படிப்பதும்
பிடித்து விடவே
பகிர்ந்து கொள்ள
எண்ணினேன்...

நான் கிறுக்கிய
வார்த்தைகள்
உயிர் பெற்றிட
பூரித்துப்போனேன்...

நான் பெற்ற
முதல் குழந்தையல்லவா
என் உணர்வும் , இதயமும்
எதிர்பார்ப்பை
உண்டாக்கியது...

தேடியும் கிடைக்கவில்லை
தேடலும் கிடைக்கவில்லை
என்றதால்
எண்ணில் பிறந்தவளே
எனக்காய் பிறந்தவளே
உனக்கான பெயர்
இதோ "கவிதை"

பெயர் சூட்டிவிட்டேன்
உன்னை நல்முறையில்
வளர்த்திடும்
பொறுப்பு எனதடி
கவலை இன்றி...
கட்டுப்பாடுகள் இன்றி ...
எட்டு திக்கும்
சுழன்று வா...

இனிய நாவினில்
இன்பங்கள் தந்து
சொல்லெனா துயரங்களை
சொடுக்கிவிட்டு...
கன்னங்களில் வழியும்
நீர் துடைத்து
எண்ணங்களை எடுத்துரைத்து
சோகங்களை துரத்தி
துணிந்து எழுந்திட
செய்திடடி
என் உயிரே...

என்றும்...பத்மாவதி

எழுதியவர் : பாரதி (22-Sep-17, 1:17 pm)
Tanglish : en uyire
பார்வை : 169

மேலே