மீண்டும் அதே நரகம்

பேசாத வார்த்தைகள்
புதைக்கப்பட்டு மௌனமாகியதும்..
கண்ணீர் கரை தேடியே
கண்ணத்தை தொடுவதும்..
ரணத்தை உணரும்
உறவுகளில்லா தனிமையின் நித்தமும்..
வலிகளை தொலைக்க வழி இல்லாமல்..
விதியின் நிர்பந்தத்தை ஏற்க முடியாமல்..
தலை எழுத்தை கைக்கொண்டு அழிக்கும் முயற்சி
தோல்வியை தழுவ..
தற்கொலைக்கு தைரியம் இல்லாமல்..
மரணத்தை கொடு என்று
பலமுறை கடவுளிடம் முறையிட்டும்..
இதுவரை எது கேட்டும்
கொடுக்காத கடவுள்..
வழக்கம் போல
மரணத்தையும் கொடுக்கவில்லை..
சரி போகட்டும்..
இந்த பூமியே வேண்டாம் என
வேற்று கிரகம் போனேன்..
வேற்றுகிரக வாசி நான் அந்நியன் என
என்னை ஏற்க மறுத்தான்..
கதறி அழுதபடி அவனிடம் கேட்டேன்..
உன் கிரகத்தில் உள்ள சிறைச்சாலையில்
எனக்கு ஒரு அறை ஒதுக்கு..
அல்லது..
சுடுகாட்டில்
ஒரு கல்லறை ஒதுக்கு என்றேன்..
அவன் பாஷை புரியவில்லை..
ஆனால் அவன் சைகை சொன்னது..
நீ பேசுவது ஒன்றுமே எனக்கு புரியவில்லை..
உன்னை கிரகம் கடத்த போவதாக சொல்லினான்..
அந்த கிரகவாசியும்
என்னை ஏற்க மறுத்தால்..
என மனதுக்குள் சந்தேகம் எழுந்த
சில நொடிகளிலேயே..
உறக்க நிலைக்கு தள்ளப்பட்டு
கிரகம் கடத்தப்பட்டேன்..
திடீரென
தண்ணீரில் நனைவது போன்ற
உணர்வில் கண்விழித்தேன்..
மழை பெய்து கொண்டிருந்தது..
அதிர்ச்சியில் துக்கம் தொண்டையை அடைத்தது..
மழையின் துளிகளில் உயிர் கரையட்டுமே
என தலைகுனிந்து நின்றேன்..
மீண்டும் அதே நரகம்..
கடத்தப்பட்ட கிரகம் பூமி...

எழுதியவர் : ஆர்.சரண்யா (24-Sep-17, 3:12 pm)
பார்வை : 86

மேலே