நினைக்கும் போது
நினைக்கும் போது கவிதையாகி விடுகிறாய்
நினையாத போது கவலையாக்கி விடுகிறாய்
நீ தேவதையா
தேவ- வதையா
மனதினை கொன்று மனதினை வென்று
வாழும் உனக்குள் வாழ்கிறேனே
நாளும் சிறையாய்
நீதானோ
கவிதையின் சிறகோ
உன் மௌனம் பேசும் விழிகளை
பாட
வார்த்தைகள் போதவில்லை
வரங்கள் நூறு வேண்டி வந்தேன்
அவை
உன்னை மட்டும் வாழ்த்துதடி
கடவுளை போற்றவில்லை
சொல்லாமல் வந்தாயே
ஒரு சொல்லில் பூவாகி பூத்தாயே
மழையாகி பெய்தாயே
என் மனமெங்கும் நீர் வார்த்தாயே