உன்னை நினைக்குதடி
கண்டுகொள்ளாமல்
நீ மட்டும்
கடந்து போகையிலே
வலியில் கிடந்து துடிக்குதடி
உலகில் கோடி தேவதைகள் இருந்தும்
உன்னை மட்டுமே மனம்
நினைக்குதடி
இரவின் கனவில் நீ வந்தாலே
அதிகாலை பூவாய் மனம் சிரிக்குதடி
கனவில் கூட நீ அழுதால்
கவிதை பூக்க மறுக்குதடி
நீ வெண்பாவா
கவி பெண்பாவா
இன்னும் காதல் கவிதை மட்டும்
காலைச் சுத்துது
இந்த கவிதைகளுக்கு மெட்டு போட மட்டும்
மனம் ஏனோ உன்னைச் சுத்துது