இறைவன் தந்த பரிசே என் வழி வந்த வாரிசே
![](https://eluthu.com/images/loading.gif)
இன்பமே இனி இன்பமே
நம் வாழ்வே தனி இன்பமே
இன்பமாய் உள்ளம் பொங்குமே
தங்கமே புது தங்கமே
அன்புமே இங்கு கொஞ்சுமே
இன்பமாய் அது மிஞ்சுமே
என் நெஞ்சமே உன்னுள் தஞ்சமே
என் செல்லமே புது செல்லமே
இந்த பூமியும் உன்னை வாழ்த்துதடா
என் தங்கமே புது தங்கமே
அந்த வானமும் உன்னை தான் பார்க்குதடா
என் செல்லமே புது செல்லமே
மலைகள் மரங்கள் மறையும் மதியுமே
நதியும் நனையும் பனியும் கனியுமே
உன் வரவை வரவேற்குமே
கூவும் குயிலும் மயிலும் மானுமே
பாடும் பறவை கிளி கூட்டம் நடனமே
இறைவன் தந்த பரிசே புது பரிசே
என் வழி வந்த வாரிசே வா வா என் மகனே
வா வா என் மகனே !