மதுவை துறந்த சாத்தான்
![](https://eluthu.com/images/loading.gif)
மதுக்கூடம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..
பெயர் பலகையை பார்த்து உள்ளே சென்றேன்.
பெயர் தெரியாத எண்ணற்ற குடிமகன்கள் அந்தரங்க உறுப்புகளை உளறி என்னை அசௌகரிய படுத்தினர்..
கோட்டரும் வாட்டரும் கூலாய்,
காடையும் கவுதாரியும் ஹாட்டாய் கையிலேந்தி வந்தனர்.
கொசுறுவாய் கொஞ்சம் ஊறுகாயும் தந்தனர்..
பக்கத்து இருக்கையில் ஆறாம் விரலோடு,அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் கோப்பையுடன் மல்லுக்கட்டி கொண்டிருந்தான்.
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என்று பான்பராக் பல் இளித்து என் புறடிக்கு பின்னால் நின்று அறம் பேசினான் ஒருவன்.
உள்ளே சென்ற சரக்கு அடங்க மறுத்து,அத்துமீறி வாந்தியாய் வெளியேறி பின்பு,அறை போதையில் போனில் பொண்டாட்டியுடன் சண்டையிட்டு கொண்டிருந்தான் மற்றொருவன்.
தூரத்தில் குளூரூட்டிட்ய மது க்ளப்பில், காரில் இறங்கிய ஆணும் பெண்ணும் மது கோப்பையுடன் தள்ளாடினர்.
மது புட்டியை இடுப்பில் சொருகிக் கொண்டேன்.
எதிரில் உள்ள பெட்டிகடையில் நாளிதழின் தலைப்பு செய்தியை பார்த்தேன்.
"மது குடிக்க காசு தராததால் தாய் அடித்து கொலை-தனையன் வெறிச்செயல்".
"மது குடித்து பள்ளி சீருடையுடன் மாணவி சலம்பல்_பெற்றோர் விசும்பல்".
"மது அருந்திய கனவன் அடித்ததால் மனைவி சட்னி-குழந்தைகள் பட்டினி"
பேப்பரை பார்த்து கர்ர்ர் தூ..என துப்பியவாறு,
ம்ம்ம் காலம் கெட்டு போச்சு,தீமையின் ஆனி வேரான மதுவை இந்த அரசு தடுக்க வில்லையா என்று டாஸ்மாக் ஊழியரிடம் கேட்டேன்.
"டேய் ஒழுங்கா குடிச்சுட்டு மூடிட்டு போடா.இதை விற்க சொன்னதே அரசாங்கம்தான்டா என்று எகிறினான்..
வெளியேறி ரோட்டில் நடந்தேன்.
ஒருவன் மயக்கமுற்று கிடப்பதை பார்த்தும் பாராததுமாய் நகர்ந்து சென்றனர்.
பசி மயக்கத்தையும் மது மயக்கமென பொது புத்தியில் விதைத்ததுதான் இந்த கேடுகெட்ட அரசுகளின் வெற்றி போல என நினைத்து வேதனை அடைந்தேன்..
அப்பா ஸ்கூலுக்கு பணம் கட்டனும் என்றோர் குரல்,
எனக்கே குவாட்டருக்கு காசு இல்லனு சுத்திகிட்டு இருக்கேன் உனக்கு வேற தண்டமா என்ற மறுமொழி காதில் விழுந்தது..
தூரத்தில் ஒரு கூட்டம்.
இழவு வீடு என்பதை சங்கும் பாடையும் சம்பிரதாயமாய் உணர்த்தியது.
கள்ளச்சாராயம் குடித்து காலமாகி விட்டார் என்று காற்றுவாக்கில் கசிந்தது.
பிணத்தருகில் பெண் ஒருத்தி கைபுள்ளையுடன் கண்ணீர் விட்டாள்..
மது பாட்டிலை எடுத்தேன்.
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என எழுதி இருந்தது..
மெல்லிய புன்னகையுடன் பாட்டிலை உடைத்தெறிந்தேன்..
நான் மதுவை விட்டுவிட்டேன்..
நீங்கள் எப்போது விடுவீர்கள் என்றேன்..
பாருடா போதையில கருத்து சொல்லுறான் என பொறடியிலே அடித்து விரட்டினர் அந்த பாமரர்கள்.
ஓ! மது பிரியர்களே வாருங்கள் என் நரகத்திற்க்கு..
உங்களுக்கு தீனத்துல் கப்பால் என்னும் மதுவை இலவசமாய் தருகிறேன் என்னை விட்டு விடுங்கள் என்று தலைதெறிக்க ஓடினேன்..