இது போதும்
வார்த்தைகள்
வலுவிழந்து
போனது.....
நிழல்
படங்களின்
நிஜங்களை
அறியாமல்
இந்த நிமிஷங்கள்
நரகமாய்
என்னுள்
மாறிப்போனது......
மாற்றிப்போனது
யார்?????
நிஜமா அன்பே
இது
நிஜமா....என்றேதான்
வினவுகிறேன்
விடிகாலை
பொழுதையும்
விடைபெறும்
நாளையும்
பார்த்து......!!!!
மாலை
வாங்கிய
மகிழ்ச்சியில்
உன்
மேனி
இன்னும்
சிவந்துதான்
போனதா?
வெள்ளி மலரே
உன்
காலடி
சேரும்.....
வெள்ளிக்கொலுசும்
அள்ளிக்கொட்டும்
அழகே
அம்சம்தான்......
நீ......பிரம்மனின்
படைப்பில்
சிறப்பம்சம்தான்.....!!
செவ்விதழ்
பூவே.....
உன் சிவப்பழகில்
சிறுவண்டாய்
நானும்
தேனுண்ணும்
நினைப்பில்
சுற்றி
வந்தேனே.....!?!?!!
அம்மணி
உன் நினைப்பில்
என்
கண்மணிகள்
இணையாமல்
இரவுபகல்
ஓடி
மறையுதடி......
இவன்
உசிரும்
ஊசலாடி
ஈசல்போல
இறகொடிந்து
இறந்து
நான் போவேனா.....?????!!
வஞ்சிக்கொடி
என்னை
வஞ்சிப்பதேனடி.....
இஞ்சி
இடுப்பழகி.....
இவனைக்
கொஞ்சடி......
காட்டாறு
போல
காதல்
கரைபுரண்டு
ஓடுதடி.....கண்டும்
காணாமல்
கரை
ஒதுங்கிப்
போனது
ஏனடி?