காதல் பழக வா-33
காதல் பழக வா-33
இதழ்கள் மோதிக்கொண்டு
யுத்தம் செய்ய அனுமதித்தால்
காலம் முழுக்க உன்னோடு
யுத்தம் செய்ய தயார் நான்
என் ஆசை கண்மணியே...
நிலவை இடுப்பில் கட்டிக்கொண்டு
புடவை தலைப்பில்
மறைக்க பார்க்கிறாய்
அதுவோ அடிக்கடி இந்த
சூரியனை எட்டி பார்த்து சிரிக்குதடி...
உன் கோவைக்காய் மூக்கை
சீண்டி சிவக்க விட்டு
நறுக்கென்று கடித்து
ருசிபார்க்கிறேன் நீயோ
பந்தியிலே வெட்கப்பட்டு
பரிமாறி நிற்கிறாய்....
காமம் மட்டுமே
இந்த காதலனின் இலக்கென்று
உர்ரென்று பார்க்காதே
காதலில் ஏதடி
காமமில்லா கீர்த்தனை...
காதலில்லா காமம் தானே தவறு...
புரிந்து கொண்டு
நெருங்கி வா இன்னுமொரு
முத்த யுத்தம் செய்து பார்ப்போம்……
ராமிடமிருந்து எந்த தகவலும் வராமல் போகவே ஒட்டு மொத்த குடும்பமும் குழம்பி கிடந்தது, போன் பண்ணி பார்க்கலாம் என்ற முடிவோடு ஹாலில் கூடி நின்று ராமின் மொபைலுக்கு அழைத்தனர்....
"ராம் நான் கண்ணன் பேசறேண்டா, அங்க நிலைமை எப்படி இருக்கு, மது அப்பா என்ன தான் சொல்றாரு, எதாவது பிரச்சனைனா சொல்லுடா, உடனே கிளம்பி வரேன்"
"கண்ணா எனக்கொன்னும் பிரச்சனை இல்லடா, நான் மதுவோட சொந்தக்காரங்க வீட்ல தான் இருக்கேன், அவங்க தான் என் பக்க நியாயம் புரிஞ்சிகிட்டு எனக்கு உதவியா இருக்காங்க... சரி ஒரு விஷயத்தை சொல்லு கண்ணா... எதுக்கு உன்ன அங்க போக சொன்னேன், உன்னோட ரிஷப்ஷன் வேலைய மட்டும் பாருன்னு சொல்லி தானே அனுப்பினேன், நீ என்ன பத்தியே யோசிச்சிட்டு இருந்தா உன் ரிஷப்ஷன் எப்படிடா நல்லபடியா
நடக்கும்..இத்தனை பிரச்சனைக்கும் நடுவுல நடக்கற நல்ல காரியம், அத சரியா நடத்தணும்டா, அது மட்டும் இல்லை... மதுவை கூட்டிட்டு உன் ரிஷப்ஷன்க்கு வருவேன், அங்கயே எனக்கும் மதுவுக்கும் நீங்க எல்லாரும் சேர்ந்து நிச்சயதார்த்தம் நடத்தணும்...அதனால அந்த பங்க்ஷன் உனக்கு மட்டும் இல்லை, எனக்கும் முக்கியம் தான்....அத மனசுல வச்சிக்கிட்டு பொறுப்பா நடந்துக்கோ"
"என்ன ராம் சொல்ற, அப்போ மது வீட்ல சம்மதிச்சிட்டாங்களா, சூப்பர்டா...எல்லாரும் பக்கத்துல தான் இருக்காங்க, இத சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க...."
"டேய் அப்படி எதுவும் சொல்லி வச்சிடாத, இன்னும் மது அப்பா முரண்டுபிடிச்சிட்டு தான் இருக்காரு, எப்படியாவது சமாளிச்சிடுவேன்,நீங்க கவலைப்படாம இருங்க, அம்மாவை கவலைப்படாம தைரியமா இருக்க சொல்லுடா, நான் ரிஷப்ஷன் ஆரம்பிக்கறதுக்குள்ள வந்துடுவேன், அதுவும் மதுவோட கைய பிடிச்சிக்கிட்டு ஊரே பார்க்க கூட்டி வருவேன்..சரிடா அப்புறம் பேசறேன்"
"ராம் உன்மேல எல்லாருக்கும் நம்பிக்கை இருக்குடா, சொன்னதை சாதிச்சிட்டு மதுவோட வாடா, பாத்துக்கோ, சரியா"
"சரி கண்ணா"
ராம் சொன்னதை அத்தனை பேரிடமும் நம்பிக்கை தரும் விதமாக கண்ணன் விவரிக்க, கண்ணன் ரிஷப்ஷன் வேலையை முழு மனதோடு பார்க்க துவங்கினர்...
"என்னங்க, எனக்கென்னவோ பயமா இருக்குங்க, ராம் மதுவை கூட்டிட்டு வந்துடுவாரா"
"என்ன ராதி இப்படி கேட்டுட்டே, நாங்கல்லாம் பாகுபலி வம்சத்தை சேர்ந்தவங்க, விட்டுட்டு வர்றவங்க இல்ல, கட்டி தூக்கிட்டு வர்றவங்க"
"ம்க்கும், இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல"
"என்னடி, எதுக்கு இப்படி பளிச்சி காட்டற, உன்ன எப்படி தாலி கட்டி தூக்கிட்டு வந்தேன், அத மறந்துட்டயா"
"என்னது தாலி கட்டி தூக்கிட்டு வந்திங்களா?"
"இல்லமா, தாலி கட்டி கூட்டிட்டு வந்தேன்ல, அத சொன்னேன்"
"நம்ம கல்யாணம் எப்படிங்க நடந்தது, நான் கண்ணு முழிச்சி பார்த்தப்ப என் கழுத்துல தாலி இருந்தது, நான் இருந்த ரூம்ல உங்க போட்டோ இருந்தது, நான் ஹாலுக்கு வந்தப்போ அம்மா சத்தம் போட்டுட்டு இருந்தாங்க, அப்புறம் ரிஷப்ஷன் பத்தி சொன்னிங்க, ஆனா நம்ம கல்யாண போட்டோ, வீடியோ எதுவும் இதுவரை எனக்கு காட்டலயே, நம்ம கல்யாணத்த பத்தி எனக்கு எதுவுமே ஞாபகத்துல கூட இல்லையே...இந்த பிரச்சனைல அத பத்திலாம் நான் யோசிக்காமலே விட்டுட்டேன், இப்போவது சொல்லுங்க எனக்கு என்ன தான் நடந்திச்சி"
(ஹய்யயோ ஆரம்பிச்சிட்டாலே, வசமா சிக்கிட்டம் போலயே, சரி சமாளிப்போம்)
"ராதி குட்டி, எதுக்கு இப்போ அதெல்லாம் யோசிச்சிட்டு இருக்க, உனக்கு சின்னதா அடிபட்டுச்சு, அப்போ நீ மயங்கி விழுந்துட்ட, அதனால தான் உனக்கு எதுவும் ஞாபகத்துக்கு வரல, அதுக்காக தானே டாக்டர் உனக்கு பெட்டி பெட்டியா டேப்லெட் குடுத்து முழுங்க சொல்லிருக்காரு, அதெல்லாம் குடிச்சி முடி, அதுக்கப்புறம் உன் கேள்விக்கெல்லாம் உனக்கே தானா பதில் தெரியும்"
"அதில்லேங்க..எனக்கு என்னவோ குழப்பமாவே இருக்கு"
"அட என்ன அம்முக்குட்டி…என்னடி நீ… அதில்ல, ஆவாக்க பொரியல் இல்லனு சொதப்பிக்கிட்டு இருக்க, இன்னும் ரெண்டே நாள்ல நமக்கு ரிஷப்ஷன், கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆகியும் என்னை பட்டினி போட்டே வச்சிருக்கியே, இத பத்தி என்னைக்காவது யோசிச்சிருக்கியா, இத பத்திலாம் பேசமாட்டியே...இப்டியே இருந்தா நம்ப வருங்கால தலைமுறை எப்படிம்மா உதயமாகும், அதுக்கு நாம தானே எதாவது பாத்து பண்ணனும்"
"ச்சீ, போங்க, உங்களுக்கு ரொமான்ஸ் பண்ண நேரங்காலம் தெரியாது, நானே குழம்பின குட்டையா நிக்கறேன், நீங்க அதுல தூண்டில் போட்டு மீன் பிடிக்க பார்க்கறீங்களா...உங்க திட்டம்லாம் பலிக்காது, போய் வேற எதாவது வேலை இருந்தா பாருங்க"
"உன் முந்தானைய பிடிச்சிக்கிட்டு சுத்தறத தவிர வேற எதாவது வேலை பார்த்தா என் கைகால் உடைச்சிபுடுவேன்னு என் அம்மா உத்தரவு போட்ருக்காங்களே, நான் எப்படி அம்மா பேச்சை மீறுவேன், நீயே சொல்லு"
"இப்படி பாவமா மூஞ்ச வச்சுக்கிட்டா மயங்கிடுவேனா, அப்டியே தாய் சொல்லை தட்டாத உத்தம புத்திரன் தான் நீங்க, அம்மா சொல்லித்தான் என்ன லவ் பண்ணிங்களாக்கும்...அந்த புரியாத வயசுல கூட கண்ல காதல் அம்பு விட்டிங்களே, அத்தை சொல்லி தான் விட்டிங்களாக்கும்...இந்த கதையெல்லாம் போய் போறவ வறவகிட்ட சொல்லுங்க,உங்க பொண்டாட்டிகிட்ட இந்த கதையெல்லாம் எடுபடாது"
"என்னடி, இந்த வாய் பேசற, இப்படி பொளந்துகட்டுரையே, உன்ன போய் வாய்பேச தெரியாத அப்பாவி பொன்னுனுள்ள ஏமாந்து தாலி கட்டிட்டேன், அப்போ மொத்தமா என் வாழ்க்கை போச்சா, அட ராமா, என்னடா எனக்கு வந்த சோதனை"
"ஹாஹாஹா, உங்க ராமை ஏன் கூப்பிடறீங்க...அவர் நிலைமையும் அதே தான்"
"அடியே என் வாயாடி பொண்டாட்டி என்ன பார்த்தா சிரிப்பா இருக்கா உனக்கு, இன்னைக்கு உன் சிரிக்கற வாயில சர்க்கரையை அறுவடை பண்ணி காட்றேன்..."
"அச்சச்சோ, என்ன விடுங்க, நான் இந்த விளையாட்டுக்கு வரல"
"அதெல்லாம் ஆல்ரெடி ஆரம்பிச்சாச்சும்மா, இனி ஸ்கோர் எடுக்கப்போறது நான்தான்"
அதற்குமேல் ராதி தன் கல்யாணம் நடந்த கதையையா யோசித்து கொண்டிருப்பாள்...இருவருக்கும் நடுவில் ஊடல் கூடலாகி தேனாக ஊற ஆரம்பித்தது...அங்கு ராமோ மதுவை மனையாளனியாய் மாற்றும் வழி தெரியாமல் கையை பிசைந்து கொண்டு கண்ணா என்னை காப்பாத்த ஒரு வழிகாட்டுடா என்று புலம்பி கொண்டிருந்தான்....