மது
காற்றோடு ஒரு பயணம் மது புயலில் சூறையாடப்பட்ட
ஒவ்வொரு மனங்களையும் பார்வையிட சுவாசம் வழியாக .
மதுவை ஒழிக்க இறைவா முதலில் ஒரு வழியை தேடு .
புவியில் பல மனைவிகளின் காதுகளில் பறிக்கப்படுகிறது தோடு
முறையாக கட்டிய தாலி மெட்டியுடன் முறையில்லாமல்
அவிழ்க்கப்படுகிறது வேகமாக
கணவன் இருக்கும் போதே மனைவி விதவை ஆகும் கோலம்
இதுதானோ கலியுக காலம் .
மனிதனிடம் மனிதனே மதுவை ஒழிக்க ஒரு வழிகளை கேட்டால்
ஐம்பது நொடி அவசரமாக தருகிறான்
ஐந்து வருடம் அவகாசம் கேட்கிறான் வெட்கக்கேடாக
ஐந்து யுகம் ஆனாலும் அரசியல்வாதிகளால் முடியாது
வேண்டுமென்றால் அவர்களும் சேர்ந்து குடிக்கலாம் .
புரியாதவர்கள் வாக்கையும் வாழ்க்கையையும் விரயமாகும் வேடிக்கைதான் தேர்தல்.
மது இல்லாத தேசம் தேடி அலைகிறேன்!
அது மரணம் என்றாலும் அதன் வாசப்படியை தொடுகிறேன் !!!...