அர்த்தமுள்ள வார்த்தைகளை அர்த்தமற்று போக வைக்காதே

உன்னிடம்
சொல்ல முடியா வார்த்தைகள்
என்னை மேலும் மேலும்
ரணமாக்கி கொண்டிருக்கிறது
ஏன் அர்த்தமுள்ள வார்த்தைகளை
அர்த்தமற்று போக வைக்கிறாய்
செவி வழி வரும் முன்பே...
தொலைப்பதற்கும் இழப்பதற்கும்
மனமில்லை என்னில்
உன்னில் எப்படியென்பது
புரிய வைப்பாயா சொல்...
நான் டைரி என்றால்
நீர் மை தொட்டு உன் கை பட்டு
இன்னும் எழுதப்படாமால் கிடக்கும்
என் வெண்ணிற பக்கங்களை
என்ன செய்வாய் சொல்
கிழிப்பாயா எரிப்பாயா
பதில் ஒன்று தருவாயா
இல்லை இதையும் மனமின்றி
செவி கேளாமல் கடப்பாயா...
ஒரு முறையாவது பேசிவிடு
சுற்றி தீவு போல் கிடக்கும்
அந்த வார்த்தைகளுக்காவது
ஒரு தீர்வு பிறக்கட்டும்...

எழுதியவர் : பாரதி நீரு (29-Sep-17, 9:07 pm)
பார்வை : 308

மேலே