தேடலின் விளக்கம்

அமைதியான தேடல் ஆழமானது.
தேடலின் விளக்கம் வெளிப்படும் போது சுவராஸ்யமாக உள்ளது..

எது நம் தேடலாகிறதோ, அதிலேயே நாம் கரைந்து போய்விடுகிறோம்...

தேடலில் கரைந்து தேடலின் பதிலாக நாமே மாறிவிடுவதே நம் வாழ்வில் நாம் அறியாத விடயம்...

அன்பே ஒருவரது தேடலானால்,
அத்தேடலில் அவர் கரைந்து போகின்றாரென்றால்,
அன்பின் மொத்த உருவமாக அவர் மாறிவிடுவார்...
அந்த அன்பின் விளக்கம் அன்பென்ற உணர்வை அவர் புரிந்தவிதமாகவே வெளிப்படுகிறது...

ஒரு பொருளின் விளக்கம், எப்படி பொருளின் குணாதிசயங்களையும், வடிமைப்பையும் கொண்டு அளவீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அமைகிறதோ, அதே போல் அனைத்திற்கும் ஒரு விளக்கம் உண்டு...

ஒவ்வொரு மனிதரும் தாமறிந்த விளக்கத்தை எடுத்துரைக்க நானும் அவர் வரிசையில் வாழ்வின் விளக்கங்களைத் தேடிக் கொண்டே அவ்வப்போது சிறு பிதற்றல்களைக் கவிதைகளென்று ஈடு இணையற்ற தமிழ் தாயின் வழியில் எழுதிக் குவிக்கிறேன்...

சிந்திப்பார் தெளிவதும்,
சிந்திக்காமல் வாழ்வார் குழப்பத்துள் உலா வருவதும் உலகில் உண்மைப் பரம்பொருளின் சித்தம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Sep-17, 12:23 am)
Tanglish : THEDALIN vilakam
பார்வை : 1663

மேலே