எதிர்கால ஆதார் இந்தியாவின் முன்னோட்டம்

அவரச அவசரமாக பெரூந்தில் ஏறியவர் தனது பயணச்சீட்டைப் பெற நடத்துநரிடம் பணத்தை நீட்டி குறித்த ஊருக்குப் பயணச் சீட்டுக் கேட்க, ஏற இறங்கப் பார்த்த நடத்துநர், " ஆதார் கார்டு கொண்டு வந்தீங்களா? ", என்றார் அந்த பயணியிடம்...

" அவசரமாக போக வேண்டும் சார். நண்பர் ஒருவர்க்கு அவசர உதவியாக இரத்தம் தேவைப்படுகிறது. அதற்காகவே செல்கிறேன். ஆதார் கார்டைக் கொண்டுவர மறந்துட்டேன். தயவு செய்து பயணச்சீட்டு தாருங்கள். ", என்றார் மிகவும் தாழ்மையுடன் கண்களில் நீர் ததும்ப...

" அதெல்லாம் எனக்கு தெரியாது ஐயா. இந்திய அரசின் ஆணைப்படி ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே என்னால் பயணச்சீட்டு வழங்க இயலும்.. மன்னித்துவிடுங்கள். நீ இறங்கிக் கொள்ளுங்கள். ", என்றவர் விசிலடிக்க பெரூந்து நின்றது...

எவ்வளவோ கெஞ்சினார் அந்த பயணி...
சிறிதும் இரக்கமில்லாமல் அவரை இறக்கிவிட்டு விட்டு பெருந்து நகர்ந்தது...

ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக புறப்பட்ட அவரிடம் கேட்கப்பட ஆதார் கார்டு என்ற அடையாள அட்டை ஒரு உயிரை பறித்தது இந்திய அரசின் ஆணைப்படி...

இந்தியாவின் மக்கள் தொகையைக் குறைக்க இது ஒரு சிறந்த வழியென்று அரசாங்கம் ஆதார் அவசியமென்று பெருமையாக விளம்பப்படுத்தியது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Sep-17, 1:36 pm)
பார்வை : 340

மேலே