பத்ரலேகா

வரி வரியாக
விரியும் கவிதைகளுக்கு
சரியான நடு என்பது
பாடு பொருளை
அறிமுகப் படுத்தி
இருக்கும் கன்னியா
இல்லை என்றால்
முடிவினில் அதனை
மடித்து வைத்து
சொல்வதே இனிமையா?

எதுவாகவோ அது
இருந்து விட்டுப் போகட்டும்
காகிதத்தில் எழுதுவது
பத்ர லேகா என்றால்
கணினியில் எழுதுவது
சித்திர லேகாவா?

லேகா என்பது
அனுப்பப் படுவதாம்
எபிரேய விவிலியம்
எடுத்துச் சொல்லுது
யூதரின் ’தனக்’
எழுனூற்றி தொன்னூறு
முறைகள் இதனை
விரித்துச் சொல்லுது.

கானான் தேசம்
தன்னைக் கண்டு
வாருங்கள் என்றே
துப்பு துலக்க
அனுப்பினர் என்று
செப்புது அனைத்தும்

கடவுளின் சொந்த
நாடு எனப்படும்
கேரள மண்ணின்
மொழியில் இதற்கு
கீற்று, பதிவு,
பதிவேடு என்றே
பல பொருள் கூறிப்
பார்க்க வைக்குது.

ஸ்ரீலேகா என்றால்
இலட்சுமி சரஸ்வதி
கடாட்சம் என்றே
சமஸ்கிருதம்
சொல்கையில்
பத்ர லேகா
என்ற பெயரில்
பாலிவுட் நடிகை
இருக்கிறாள் என்றால்
எனக்கென்ன தொல்லை?.

.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (4-Oct-17, 11:14 am)
பார்வை : 69

மேலே