விவசாயிகளின் குரல்

விவசாயிகளின் குரல்
************************

தண்ணீர் பஞ்சம் உருவாகவில்லை.
உருவாக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஊருக்குள் வரவில்லை.
ஊர் தான் ஆற்றிற்குள் சென்றிருக்கிறது.
(யானை ஊருக்குள் வரவில்லை)

தண்ணீர் பற்றாக்குறை தான்
விவசாயிகளின் இறப்புக்கு காரணம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்.

விவசாயிகளின் இறப்புகளுக்கு
காரணம் நீ என்றால் நம்புவாயா...?

ஆம் நீ தான்.
விவசாயிகளின் இறப்பு
உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை.
போட்ட முதலைக் கூட எடுக்க முடியவில்லை.

உதாரணமாக
விவசாயி
இரண்டு ரூபாய் செலவு செய்து
விவசாயம் செய்தால்
உற்பத்திக்கு கிடைக்கும் விலையோ
மூன்று ரூபாய்
பல நேரங்களில்
ஒரு ரூபாய்.

ஏன்டா விவசாயம் செய்தோம்.
என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் அதே பொருள்
நம் கைகளுக்கு வரும்பொழுது
பத்து ரூபாய்...

நமக்கு அண்டை மாநிலங்கள்
தண்ணீர் தருவது இருக்கட்டும்.

நம்ம ஊர்ல பெய்யற தண்ணீரை
முறையா சேமித்தாலே நமக்கு போதும்.
ஆனா வீணா போகுது

நிலத்தடி நீரை சேமிக்க
சீமை கருவேல மரங்களை அழிக்க வேண்டும்...ஆகாயத் தாமரைகளை வேரறுக்க வேண்டும்.பார்த்தீனியங்களை களை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் உணர்வுகளை
புரிந்து கொள்ள விவசாயிகளா இருக்கணும் என்றில்லை...
மனிதனாக இருத்தலே போதும்...

விவசாயிகளின் தற்கொலைகள்
தற்கொலைகள் அல்ல.
அனிதாவின் கொலை போன்றதே...

உலகம் வாழ தகுதியற்ற தாக
மாறிக்கொண்டிருக்கிறது
என்று சொல்கிறார்கள்.
ஆனால் அதற்காக என்ன செய்தோம்...
தொடர்ச்சியாக செய்யும் தவறுகளை
தொடர்ந்து செய்து கொண்டு தானே இருக்கிறோம்.

நமக்கு தெரியாதா
டெங்குவிற்கு என்ன காரணம்...
தேங்கும் கழிவு நீர் தான்..
குப்பைகள் தான்...
முக்கியமாக பாலித்தீன்...(மண்ணையும் மலடாக்குகிறது)

நம் அரசு போல்
ஒரு அரசு இல்லை.

மதுவை கையில் கொடுத்து விட்டு
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
என்பது போன்றதே....

பாலித்தீன் களை தவிர்ப்பீர்.

விவசாயிகள் வாழ வேண்டும்
உலகம் இயங்க...

எல்லாவற்றிலும்
நேரிடையான கொள்முதல்
பரிமாற்றம் இருக்க வேண்டும்.
அப்பொழுது தான்
சரியான விலை கிடைக்கும்.
மக்களுக்கும் நியாயமான விலையில் பொருள் கிடைக்கும்.
அரசாங்கமே மக்களுக்கு உணவுப் பொருட்களை விற்கலாம்.
அதை ஏன் தனியாருக்கு தாரை வார்த்தது.

நம் ஊர் கேப்பையை
இங்கேயே வாங்கிவிட்டு

நாலு மடங்கு விலை ஏற்றி விற்கிறார்கள்.

இதெல்லாம் எப்படி தெரியுமா...
கல்வியையும் மருத்துவத்தை போலவே
தனியார் மயமாதல் ...

தனியார் மயமாதல்
எதில் வரவேண்டுமோ அதில் தான் வர வேண்டும்.

அத்தியாவசியங்களில் வந்தால் விடத்தை கலக்கிறார்கள்.

நாம் சாப்பிடும் உணவுகளில் நிறைய
கலப்படம்...பூச்சிக்கொல்லிகள்...சாயம்...
எல்லாம் கலந்து விடமாகத் தான் வருகிறது.

பிறந்த குழந்தைக்கு கூட நோய் வருவதெல்லாம் அநியாயம்....

நம் உணவு முறை சிறந்த முறை.

உணவே மருந்து.

நிறங்களில் வீழ்ந்தாயே மனிதா...
அழகு நிறத்திலா இருக்கு.
பண்பில் இருக்கு.

மஞ்சள் தேய்த்து குளிப்பது
பழையது என்றால்
நீ எதுவும் அறியவில்லை என்கிறேன்.

மஞ்சள் சிறந்த மருந்து.
சிறந்த நோய் எதிர்ப்பு...
முகத்தை பொலிவாக்கும்

விவசாயம் என்பது வேலை அல்ல...
நம் வாழ்க்கை முறை...

நம் முன்னோர்கள்
நமக்கு எல்லாவற்றையும் சிறப்பாய் தந்தார்கள்...

நாம் நம் வாழ்வாதாரத்தை காத்து
இயற்கையோடு வாழ்வோம்.

இயற்கை அழியாமல் திட்டமிட்டு வளர்தலே வளர்ச்சி...

காட்டை அழித்து
கோவில் கட்டி
மழை வேண்டினால்
மழை எப்படி வரும்...

இயற்கையோடு நுட்பம்
இருத்தலே வளர்ச்சி...

முகத்திற்கு மேலே முகமூடி தேவையா?
இயல்பாக வாழ்வோம்
இயற்கை என்னும் இசையோடு...

இயற்கையோடு வாழ்வோம்...
#SaveNature
#SaveEarth

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Oct-17, 3:34 pm)
பார்வை : 241

சிறந்த கவிதைகள்

மேலே