கல்லறை வரை பேசும் காதல்

மெல்ல அசைந்தாடி வரும்
அலைகடல் சொல்லும்...
ஆழ்கடல் நான் ஆழமில்லை
அன்பு கொண்ட உள்ளம் தான்
ஆழமென்று...!
பூக்கள் தாம்
பூத்துக் குலுங்கும்...-இங்கே
இரு மனங்களும் பூத்து
குலுங்குவதை
என்னவென்று சொல்வது...!
உனக்கு நான் என்ற
உரிமை என்றுமே சுகம்...
எனக்கு நீ என்ற நம்பிக்கை
வாழ்வில் கிடைத்த வரம்...!
காதலித்தல் இன்பம் - என
கள்ள மனம் மகிழும்...
காதலிக்கப்படுவது
இன்னும் சுகம் என
ஆழ்மனம் ஆர்ப்பரிக்கும்...!
காயங்கள் எல்லாம் காதலில்
சாதாரணம் தான்...
அதை வடுக்களாக மாற்றா காதல்
கல்லறை வரைக்கும் பேசும்!