என் உயிர்த்தோழி

நான் வேண்டும்
வரத்தினைக் கொடுக்கும்
இறையவள்!!!

எனக்கு அறிவுரைக்
கூறும்போது,
என் தாயவள்!!!

என்னைத் தாங்கும்,
தந்தை அவள்!!!

இருளிலும் என்னை விட்டு நீங்காத
நிழல் அவள்!!!

என் விழியினைக் கண்டே
என் மனதினை அறியும்
மாயவள்!!!

என் இன்பத்தை
இயற்கைக்கு கூறி,
மகிழ்பவள்!!!

என் துன்பத்தை
தூக்கி எறியும்
வெளிச்சம் அவள்!!!

அன்பிற்கு பாத்திரமானவள்!!!
என் உயிர்த்தோழியவள்!!!!

எழுதியவர் : பானுமதி (7-Oct-17, 8:16 am)
சேர்த்தது : மதி
பார்வை : 3167

மேலே