இந்த மிருகங்கள்
பாலியல் பலாத்காரத்தில்
பதுங்கியே ஒரு மிருகம்..
பதவி பணமென்றே
பறக்குமொரு மிருகம்..
பதுக்கல் செய்தே
பகட்டிலொரு மிருகம்..
போலித் துறவும்
பக்தியுமாயொரு மிருகம்..
சாதி சமயமெனச்
சாதிக்குமொரு மிருகம்..
எப்படியும் வாழலாமென
ஏய்க்குமொரு மிருகம்..
இப்படி இருக்குது
பல மிருகம் பாரினிலே..
கூண்டிலடைத்து இவற்றைக்
காட்டில் விட்டு,
தப்பிவிடாமல்
தக்க காவல் போடவேண்டும்-
தாக்கும் சிங்கம் புலி
தயவுடனே...!