காதல்

தையல் அவள்
திங்களனை முகத்தாள்
வண்டார்க் குழலி
கயல் சார் விழியாள்
வில்லொத்த புருவத்தாள்
வா வா என்று என்னை
அழைப்பது போல் நான் நினைக்கும்
காந்த இமைகள் உடையாள்
சிற்றிடையாள் அவள் பாதங்கள்
சிவந்த கமலமென காண்கின்றேன்
சற்றே மெல்லியதாய் நீண்ட
அவள் நாசி அந்த சிவப்புக் கல்
மூக்குத்தியால் அவள் முகத்திற்கு
அவ்வுலகு தேவ கன்னியோஇவள்
என்ற சாயல் தந்திட
சிறிதாய் தன் கொவ்வை
செவ்வாயைத் திறந்து
சிறுநகைப்புரிந்து என்னை அவள்
நோக்கும்போது அவள் தன்
உள்ளத்தின் உள்ளே என்னை
இழுத்து செல்கின்றாள்
தையல் இவள்தான் என்னவள்
என்னருமைக் காதலி
எனக்கென்றே பிறந்த ஒப்பிலா
அழகு மடந்தை குணமடந்தை;
இந்த கவிதை மலர் மாலை
என்னவளுக்கு நான் தந்திடும்
புகழ் மாலை, பாமாலை .

+

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Oct-17, 3:22 pm)
Tanglish : kaadhal
பார்வை : 208

மேலே