யதார்த்தம்
பெண்ணே முன் போல மணிக்கணக்கில்
உன்னோடு கதை பேச ஆசை தான் .
ஆனால் நிஜங்களெல்லாம் நெடிய
சுவர்களாய் வளர்ந்து நிற்க
நம் காதல் கனவுகளெல்லாம்
பனியாய் உருகிப் போக
நீயும் நானும் இங்கே
யதார்த்த உலகில்
பயணம் போகிறோம்.
அருகிருந்தாலும் இணையாத
ரயில் தண்டவாளங்களைப் போல.

