அன்பின் அராஜகம்

வானில் சிறகடிக்கும் பறவை நொடி பொழுதில் கண்களுடன் உறவாடி மறைந்து போவது போல்
என் நெஞ்சோடு உறவாடி சிறு பொழுதில் என் உயிரிலே கரைந்து போனாயடி..
என் அன்பு இரு வேறு உள்ளங்களில்.. என் நிலை சொல்ல முடியாத மேகத்தின் கண்ணீர்..
நிற்க முடியாத அலைகளின் தவிப்பு.
நகர முடியாத மரங்களின் கோபம்..
கருவில் இருக்கும் சிசுவை மனதால் முத்தமிடும் அன்னையின் பாசம்..
சொல்ல முடியாத எல்லா அன்பு நிலைகளும் எனக்குள்ளே...
இவள் முகம் காண துடிக்கவில்லை
அவள் முகம் காணாமல் இதயம் துடிக்கவே இல்லை..
இவள் அன்பில் சிறு மின்மினி
அவள் நிலவின் பெருஒளி..
இவள் கண்களில் என்னை பார்த்தாள்.
அவள் கண்மணிகளாகவே என்னை
பார்த்தாள்.

அன்பிற்கும் உண்டோ???

இவள் அன்பும் அவள் அன்பும் என்னை நீதிபதியாக நிற்க வைத்து நியாயம் கேட்டன..

நீதி தேவதை கண்கள் மட்டும் அல்ல தன் இரு செவியையும் கட்டி கொண்டாள் என்னுடைய தீர்ப்பை கேட்டு,..

இன்று நானே குற்றவாளியாக அவளுக்கு வழங்கிய தீர்ப்பால்...

எழுதியவர் : அமர்நாத் (10-Oct-17, 3:50 pm)
பார்வை : 156

மேலே