சுயம்

சகியே,
உன்னில் நான் வாழவும்
என்னில் நீ வாழவும்
உனக்குள் என்னைக் காணவும்
எனக்குள் உன்னைக் காணவும்
ஏற்படுத்தினார்கள் பெரியோர்கள்
நம் இருமனம் இணையும்
திருமண ஒப்பந்தத்தை.
ஆனால் இன்றோ
உன்னை நானாக மாற்றி
உனக்குள் என்னைக் கொண்டு வர
நானும்
என்னை நீயாக மாற்றி
எனக்குள் உன்னைக் கொண்டு வர
நீயும்
போராடிப் போராடி
கடைசியில்
பெரியோர்கள் மேல் பழி போட்டு
நாமே ஏற்படுத்தினோம்
நம் மணமுறிவு ஒப்பந்தத்தை.
இப்போது நமக்குள்
எந்த வேதனையும் இல்லை.
எந்த பேதமும் இல்லை.
ஏனென்றால் இன்று
நான் நானாகவே இருக்கிறேன்.
நீ நீயாகவே இருக்கிறாய்.

எழுதியவர் : abimanyu (10-Oct-17, 4:36 pm)
Tanglish : suyam
பார்வை : 122

மேலே