நான்காவது சிங்கமும் புதிய இந்தியா வும்
வசந்தத்தின் வாசல் வரை
வந்தேவிட்டோம்...!
நுழைவுச் சீட்டிற்க்கோ?
ஆயிரங்கள் வேண்டும்;
ஏ! ஆயிரமே
நீ இருந்தபோதும்
எங்கள் கைசேரவில்லை
இப்போதோ இறந்து விட்டாய்...
ஈராயிரமாய்! உருமாறியபோதுதான் உணர்ந்தோம்
வறுமையின் நிறம் சிவப்பல்ல
ஊதா என்று..
ஏழைகளுக்கு இல்லை
யாருக்காகவேனும்
பெற்றெடுத்தாயா?
புதிய இந்தியாவை...!