கல்லூரி காதல்
கல்லால் ஆன கட்டிடங்கள்
காதல் கலத்தாலான மாணவ உள்ளங்கள்..
ஓடி விளையாடிக்கொண்டிருந்த நட்புகள்
அங்கும் ஒழிந்து கொண்டிருந்த சில காதல்கள்..
கதிராளிக்குள் அகப்பட்ட சில முகங்கள்..
ஆனால் கண்மணிக்குள் சிறைப்பட்ட உன் முகம்...
கல்லூரி சாலை
நீ நடந்த புல்வெளி
அதன் சேதி சொன்ன பனித்துளி...
முதல் நாள் முடங்கி கிடந்த
என் வார்த்தைகள்..
கடந்து போன நாட்கள்
கதைப்பதற்கு காரணம் தேடிய கணங்கள்..
கல்லூரி விழாக்கள் உன் முகம்
மட்டும் தேடிய என் கண்கள்..
எதேச்சையான உன் கண்ணசைவு
காதலுக்கு பச்சை விளக்காய் நான் கண்ட
பகல்கனவு...
காகித கடிதங்கள்,
மனதோர என் கவிதைகள்
என் காதல் காவியத்தின் கதாப்பாத்திரங்கள்..
இறுதி நாள்
இன்றோடு ஊமைக்காதலுக்கு
உயிர் கொடுப்பதற்காய்
உன் முன் நான்..
உடன்பாடில்லை என்றது
உன் உதடுகள்...
தரைக்குள் தஞ்சம் புகுந்தது
தாஜ்மகால்...
பாலைவனப்பனியாய் பறந்து
போனது பள்ளிக் காதல்..!