பெண்தானே

பத்துமாதம் தாய் அவளின்
பாச வலைகளில் பாதுகாப்பு
நடை பழகும் வரை
உயிர் நண்பன் என்ற பெயரில்
தந்தையால் பாதுக்காப்பு
சன்டையிட்ட போதும்
சகோதரனால் பாதுகாப்பு
என பாதுகாக்கப்பட்டவள் இன்று
வெளிவர பயப்படுகிறேன்!,
என் சமூகத்தில்
இதனைக்க கண்டதால்;
பகுத்தறிவு பெற வேண்டும் என்று
பள்ளிக்கு சென்றால்
அங்கு
பாலியல் தொந்தரவு,
கனவுகளுக்காக கல்லூரி சென்றால்
அங்கு காதல் என்ற பெயரில்
தொந்தரவு,
குடும்ப வறுமைக்காக
பணிசெய்ய சென்றால் அங்கு
பல தொந்தரவு,
இன்னும் இன்றியமையாமல்
இருக்கும் வாழ்க்கைக்காக
இரவு நேர பணி சென்றால் அங்கு
இன்னல் என்ற தொந்தரவு,
பகலில் பாதையில் சென்றால்
அங்கு பழக்கம் இலலாதவர்களின்
காம பார்வைகள்
அங்கும் இங்கும் வீசி
விபத்தைக் கொடுத்தால்
விதியும் கை கட்டி சிரிக்கின்றது!
எங்களுக்கு விடியல் பிறக்க
வழியில்லையென்று!!,
ஈன்ற தாயும்
வளர்த்த தந்தையும்
உடன் பிறந்த சகோதரனும்
எத்தனை நாட்கள் நிழலாக
உடன் வர முடியும்?,
உரிமையைக் கொடுத்து
தனியாக நடக்க விட்டால்
அவள்
துணையின்றி வீதியோரம்
தூங்கிக்கொண்டிருக்கிறாள்
"பிணமாக",
உயிர் பிரிந்த பின்பு
உறவுகள் வந்து என்ன பயன்?,
உதிரத்தில் உதிக்கும் பெண்
உதிரத்திலே உறைந்து கிடக்கும்
காட்சிகளை
கண்ணீரால் மட்டும் தான்
துடைக்க வேண்டுமா?,
உடன் பிறக்கவில்லை என்றாலும்
உடல் அளவில்
அவளும் பெண்தானே,
உன்னை சுமக்கவில்லை என்றாலும்
அவளும்
ஒரு உயிரை சுமக்க வேண்டிய
பெண்தானே,
உனக்கு இதயத்தை
கொடுக்கவில்லை என்றாலும்
அவளும்
இன ரீதியில் பெண்தானே,
இச்சைக்காக அலையும்
சிலரின் மத்தியில்
அழகாக நடந்தால் அது
அவளின் தவறா?,
வெட்க்கத்தில் சிலிர்த்த
பெண்கள் எல்லாம் இன்று
வேதனையில் தவிக்கின்றார்கள்
சமமாக உரிமையைக் கொடுக்கும்
சமூகத்தின் மத்தியில்
பிணமாக அவள்
சாகடிக்கப்பட்டு சவப்பெட்டியில்
வந்தால்
வாழ்க்கையை வாழ
எப்படி நேசிப்பாள்?,
பலம் படைத்தவர்களின்
மத்தியில்
பலம் இன்றி இருப்பவள்
பிற்க்காலத்தில்
பழிச்சொல் பேசப்பட்டாள்
பாவப்பட்ட பாவை அவள்
பயமின்றி எப்படி வாழ்வாள்?,
வசதி என்ற ஒன்று
இல்லாத காரணத்தினால்
வறுமையின் பிடியில் சிக்கி
வாழ்க்கைக்காக போகும் போது
எங்கள் மத்தியில்
கண்ணீர் மட்டுமே
கறையாத ஒன்றாக இருந்தால்
வேறு என்ன செய்ய முடியும்?
இந்த சமூகத்தில்,
சமூகத்தில் விலங்காக
நடமாடும் ஒருவனை
சுமந்தவளும்
பெண்தான்,
அவனின் சுயநல சுகத்திற்க்காக
தேடுபவளும் பெண்தான்,
பிறக்கும் இடம்
வேறு ஒன்று என்றாலும்
படைக்கும் இனம் ஒன்றுதானே
அவர்களுக்கு
அது ஏன் புரியாமல் போகின்றது???
??????????????????????????????????
இப்படிக்கு
வழியும் கண்ணீரை
துடைக்க முடியாதவளின்
துன்பம்...