என்னவளே உன்னைத் தேடி

என்னை ஏமாற்றிவிட்டு சென்றவளே!
பட்டுப் போனேனடி நான் நீயின்றி...
காதல் நீரூற்றி மீண்டும் நான் தழுக்க வந்தவளே!
மீண்டும் என்னை விட்டு நீ பிரிந்தாலே,
பட்டமரமாய் காய்வேனடி நான்...

துண்டு துண்டாக வெட்டி தீயிலிட்டு எரித்து என் அஸ்தியைக் கடலில் கரைத்துவிட்டுச் செல்லடி...

கடலில் கரைந்த நான் அலைஅலையாகப் படையெடுப்பேனடி
உன்னை நெருங்க...
நீராவியாகப் பரிணமித்து மேகமாய் உருவெடுத்து அன்பே உன்னைத் தேடி வருவேனடி...
நீ இருக்குமிடத்தில் மழையாக பொழிவேனடி...

கெட்ட கனவாய் என்னை நீ மறந்தாலும்
உன் உள்ளத்தை எட்டிப்பறிப்பேனடி இந்த கவிதையால்...

உடலென்ற சிறையை உடைத்து, அன்பே உன்னைச் சுற்றிலும் நான்...
என்னை உணர்வாயோ நீ?
என்னை புரிந்து கொள்வாயோ நீ??
என்னைப் பிரிந்து செல்வாயோ நீ???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Oct-17, 8:37 am)
பார்வை : 1029

மேலே