தமிழ்

தாயென்றேன் துடிக்கிறது அறுந்த கொடி -மாற்றான்
தந்தை என்றேன் வெடிக்கிறது அணுவின் பிடி -நின்
உயிரென்றேன் உறைந்திற்று
என்னவளின் நொடி -எம்
உறவென்றேன் உதிர்ந்தனர்
என் வழிக் குடி -ஒன்றாய்
இத்துணையும் இணைக்கும் துகளே உனக்கிங்கு
எவையேனும் இழப்பேன்-அகிலம்
அத்துணையும் ஆன தமிழே
உனையான்
என்சொல்லி அழைப்பேன் ..??

--ஜார்ஜ்

எழுதியவர் : ஜார்ஜ் (15-Oct-17, 11:54 pm)
பார்வை : 385

மேலே