அற்புத ரோஜா

"அற்புத ரோஜா"
====================================ருத்ரா

என்றோ ஒரு நாள்
எதோ ஒரு வானவிளிம்பில்
ஒரு மின்னலைக்கண்டேன்.
அன்பே!
அன்று இழந்த என்கண்கள் தான்.
அதன் பிறகு
வானம் இல்லை.மேகங்கள் இல்லை.
அந்த சூரியன் எப்படி
கருப்பு வட்டமாய் கழன்று போனது?
இனி என்று
நம் கண்கள் வழியே
சன்னல் வைத்து
பார்த்துக்கொண்டிருப்பது?
கால ஓட்டம்
நம்மை மலர்ச்சருகுகளில்
நடக்க வைக்கத்துவங்கி விட்டது.
"சர சர" எனும் அந்த ஒலிக்குள்ளும்
உன்னை இதோ பார்த்துவிடுவேன்
என்கின்ற அற்புத "ரோஜா" ஒன்று
இதழ் உதிராமல்
இன்னும் என் இதயம் அருகே
உரசிக்கொண்டு
பொறி பறக்கசெய்து கொண்டிருக்கிறது!

==========================================

எழுதியவர் : ருத்ரா (16-Oct-17, 6:14 am)
Tanglish : arputha roja
பார்வை : 119

மேலே