தஞ்சமின்றி

தஞ்சமின்றி அழைகிறேன்
உன் நெஞ்சமிழந்த காரணத்தால்,

பஞ்சமின்றி கவலை தருகிறாய்
செயலிழந்த இதயத்தில்,

கொஞ்சமாவது நேரம் கொடு
கொஞ்சி நீ கடித்ததை நினைக்க,

காதல்
நீதிமன்றித்தில் நீ யில்லாததால்
தீ பற்றியது என் மன்றம்

வழுக்கி விழுவது என் இயல்பென்றாலும்,
இன்றேனோ
நொஞ்சம் அதிகம் வலிக்கிறது நெஞ்சம்

எப்படி இறப்பென்பதை யாரும் வாழ்ந்துகொண்டே கண்டதில்லை,
இப்படி வலிக்குமென்று தெரிந்தும்
காதலைவிட்டு செல்வதில்லை.

காய்ந்த நிலம் எல்லாம்
கானல் நீரில் செழித்திடாது,

கண்ணிலாயிரம் பெண்ணென்றாலும்
கண்டவளிலெல்லாம் காதல் இனித்திடாது...

வரும்வரை காத்திருப்பேன்,
நீ என்றாலும் சரி
மரணம் என்றாலும் சரி.

எழுதியவர் : சுரேஷ் காந்தி (16-Oct-17, 12:35 am)
பார்வை : 315

மேலே