என் அழுத்தக்காரன்
என் அழுத்தக்காரன்
என் பொழுதுகளை களவாடிய உன்மேல் தீரா கோபம்தான்....
நீ மூடிக்கொண்ட மனக்கதவை உதைத்து தள்ளிவிட்டு
என் காதலுக்கான நீதியை கேட்கவேண்டும் என்ற எண்ணம் தான்....
ஆனாலும் அழுத்தக்காரனடா நீ....
நீ நான் விரும்பியவனாயிற்றே....
என் வளர்ப்பில் சிலகாலம் வாழ்ந்தவனாயிற்றே....
வளர்ப்பு தப்பிப்போகுமா என்ன...??
அதான் வளைந்துகொடுக்க மறுக்கிறாய்.....
-நர்மதா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
