உணவு உட்கொள்ளும் போது, விருந்தாளிக்கு விடை கொடுத்து வழி அனுப்பலாமா

மூதாதையர் சொன்னதாக, நாம் இன்றளவும், பல சடங்குகளையும் வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம். நாம் உண்ணும் போது, விருந்தாளியை வழியனுப்பி வைக்கக் கூடாது என்ற நடைமுறை இவற்றுள் அடக்கம். சிலர் இந்த பழக்க முறையை, ஒரு மூட நம்பிக்கை என்று கருதுகின்றனர். மூட நம்பிக்கைகளை விதைக்க நம் முன்னோர்கள், முட்டாள்கள் இல்லை என்ற வாதம் உள்ளது. இவ்வாதத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. எதனால் இந்த பழக்க முறையை முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தினர் என்று எண்ணிக்கொண்டிருந்த போது, உதித்த அனுமானமே இந்த எழுத்து.
வீட்டுக்கு வந்த விருந்தாளியை, வாசல் வரை வந்து வழியனுப்புவதே, தமிழர் பண்பாடு. உணவு உட்கொள்ளும் போது, அவ்வாறு வழியனுப்புவது சரிவர இருக்காது. அதற்காகவே, விருந்தாளிக்கு விடை கொடுக்கும் போது, உணவு உட்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப் பட்டது. விருந்தோம்பலுக்கு பெயர் போனவர்கள் அல்லவா!!! தமிழர்கள்!!! இந்த அறிவுறுத்தல், நாளடைவில், "வீட்டில் யாரேனும் சாப்பிடும் போது, நாம் வெளியில் செல்லக்கூடாது" என்று மருவிப்போனது.

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (20-Oct-17, 2:40 pm)
சேர்த்தது : தமிழ்ச் செல்வன்
பார்வை : 107

மேலே