வள்ளல் பாரி

வள்ளல் பாரி

அடேய்....அடேய்......
இங்கே வாடா ? சீக்கிரம் வா?
எதிர்முனையில் இருந்து ....
என்னடா வேண்டும் ? உனக்கு.....இதோ வருகிறேன் என்று தங்கமூட்டையை சுமந்து கொண்டு அழகான புன்னகையுடன் வருகிறான் கதாநாயகன் பாரி.
ஈக்கள் மெய்க்கும் கொசுக்கள் ரீங்காரமிட்டு குப்பைத்தொட்டியில் கிடைக்கும் ஒரு பொட்டலத்தை புன்சிரிப்போடு கைகளில் எடுக்க ,எச்சில் ஊற காத்திருக்கிறான் கதாநாயகனுடன் நண்பன் வள்ளல்.
பாரி இந்த உணவு சரியில்லையா? என்று வருத்தமாக கேட்கிறான் வள்ளல் .
இல்லை! இல்லை ! இது நேற்று இரவு வீசப்பட்ட உணவுதான் சாப்பிட உகந்ததுதான் என்று சொல்லிக்கொண்டு மகிழ்ச்சியுடன் உணவை உட்கொள்கின்றனர் கடவுளின் குழந்தைகள் .

தூங்கலாமா? பாரி...என்கிறான் வள்ளல் . சரி வா என்கிறான் பாரி .
நாளை நடக்கப்போவது தெரியாமல் இருவரும் படுத்துக்கொண்டு காலஅட்டவணையை தயார் செய்கின்றனர்.
பாரி......
நாளைக்கு காலையில் ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரை குப்பை எடுக்கணும்....
பத்து மணி முதல் பனிரெண்டு மணி வரை பள்ளியில் கழிப்பறைகள் சுத்தம் செய்யணும்.... அப்புறம்
பனிரெண்டு மணி முதல் இரவு பத்து மணி வரை மதுபானக்கடையில் மேசையைத் துடைக்கணும்...
சரியா...?
சரி என்கிறான் பாரி .
காலை இருவரும் எழுந்து அவர்களது தங்கமூட்டையை
எடுத்துக்கொண்டு சாலையில் கிழிந்த ஆடைகளுடன் குப்பைகளை தீவிரமாக சுத்தம் செய்கின்றனர் .உணவு உண்ட பிறகு பள்ளிக்கு செல்கின்றனர்.
படிப்பதற்கு அல்ல துடைப்பதற்கு........
பாரி பாரி இன்றைக்கு என்ன நாள் தெரியுமா?
அடேய் ஜனவரி 30 cleanliness day.
அப்படினா? எனக்கும் தெரியலடா?
இந்த தம்பியிடம் கேட்கலாமா?
தம்பி cleanliness day னா என்னப்பா?
சுத்தம் செய்யற நாள் அண்ணா?
என்னடா பாரி . நாம் தினமும் சுத்தம் செய்யறோம் .
அப்படினா நமக்கு தினமும் cleanliness day தான்.
சரி வா!... கழிப்பறையை சுத்தம் செய்வோம்

(வெறும் பதகைகளில் விளம்பரம் செய்வதை விட்டு விட்டு பாரி வள்ளல் போல் செயல்களில் செய்வோம்.)

இதை ஒரு ஓரமாக ஆசிரியர் உற்று கவனிக்கிறார். அவர்கள் பணி முடிந்து விட்டது. பாரி மற்றும் வள்ளல் மதுபான கடைக்குள் மேசையை சுத்தம் செய்கின்றனர். பள்ளியில் பார்த்த அதே ஆசிரியர், தம்பி இங்க வா. எனக்கு இரண்டு தண்ணீர் பாக்கெட், அப்புறம் ஒரு பிளேட் சிக்கென். இதோ வருகிறேன் சார்.
மீண்டும் அழைக்கிறார்.
உங்கள் பெயர் என்னப்பா? பாரி வள்ளல் சார்.
ஏன் இப்படி இருக்கீங்க?.
எங்க அப்பா அம்மா இல்லை சார்,
அதனால் தான் கிடைக்கின்ற வேலையைச் செய்கிறோம்.
அந்த ஆசிரியர் என்னுடன் வாருங்கள். நான் உங்களுக்கு நல்ல படிப்பு மற்றும் வாழ்க்கையை தருகிறேன் என்கிறார். எங்களுக்கு நல்ல வாழ்க்கையை தருவதற்கு முன்னால் உங்கள் குடும்பத்தை எண்ணி பாருங்கள். நீங்கள் மது குடிப்பதனால் உங்கள் பிள்ளைகளையும் எங்கள் நிலைமைக்கு தள்ளி விடாதீர்கள் என்றனர் வள்ளல் பாரி. எனக்கும் குடும்பம் எதுவும் இல்லை என்று அழுகிறார் ஆசிரியர்.
அப்பா ! அப்பா! அழாதீர்கள் என்ற குரல்.
பாரி வள்ளல் நாங்கள் உங்களுடன் வருகிறோம் .ஆனால் ஒரு சத்தியம் செய்யுங்கள். நீங்கள் இனிமேல் குடிக்க கூடாது.
சரிப்பா வாங்க போகலாம் என்று மூவரும் செல்கின்றனர்.
(இந்த சமூகம் குழந்தைகளுக்கு நிறைய பாடங்களை தருவதில்லை, ஆனால் குழந்தைகள் இந்த சமூகத்திற்கு நிறைய பாடங்களைத் தருகின்றனர்).
அப்பா! நாளைக்கு பள்ளி போகணும். எதுக்குப்பா? கழிப்பறை சுத்தம் செய்ய..
இனிமேல் நீங்கள் இருவரும் போக வேண்டிய இடம் கழிப்பறை அல்ல.. வகுப்பறைக்கு.
நல்லவர்கள் சமூகத்தில் இருந்தால் ஆதரவற்ற குழந்தைகள் செல்ல வேண்டிய இடம் கழிப்பறையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.....
(இக்கதையில் நடைமுறையில் பேசும் தமிழும் உபயோகிக்கப்பட்டுள்ளது.ஏதேனும் பிழை இருப்பின் மனிக்கவும்)

குப்பைத்தொட்டி பூக்கள்

“குப்பை தொட்டியில் மிதக்கின்ற பூக்கள் நாங்கள்..
தாயே எறிவதற்கு மனம் வந்த உனக்கு.
எடுத்து வளர்க்க மனமில்லையோ...
இறப்பு தெரியாமல் மனிதர்கள் வாழும் இவ்வுலகில்...
பிறப்பு தெரியாமல் வாழும் உயிர்கள் நாங்கள்.
ஒருவேளை உணவிற்காக கையேந்தி நிற்கும்
எங்களது பசிக்குரல் கேட்கவில்லையா..

கருவறையில் மடிந்திருந்தால் குருதியாக வந்திருப்போம் தாயே ...
எங்களை போன்ற பூக்களை கிள்ளி எறிந்த காரணம் என்னவோ...
ஒருநாள் உன்னை பார்க்க வேண்டும் என்று சிந்தை துடிக்கின்றது...
ஏன் தெரியுமா?
இரக்கமில்லாத உள்ளத்தை என் அன்பால் விழ்த்துவேன்....!
"அன்பு இல்லம்" இல்லாத உலகம் வேண்டும் தாயே...!
என்று விடிக்கறதோ அன்று உனக்காக காத்திருப்பேன்....!
நீ வருவாய் என..!
இப்படிக்கு குப்பைத்தொட்டி அருகில் நிற்கும் வள்ளல் பாரி ...!”

நீதி: படிச்சா புரியாது...? அனுபவத்தின் தேடல்.

எழுதியவர் : வாகை மணி (21-Oct-17, 10:56 am)
சேர்த்தது : வாகை மணி
Tanglish : vallal paari
பார்வை : 306

மேலே