நினைவுகள்

பிடிச்சிருக்கு.
*****
ரசிக்கிறேன்
என்னை விட்டு விலகுவதும்
நெருங்குவதுமான
உன் விளையாட்டினை...

என்னை அழ வைப்பதும்
சிரிக்க வைப்பதும்
உன் சந்தோஷத்தின் உச்சம்
என உணர்கிறேன் நான்..

என்னை நான் மறந்தாலும்
உன் ஒவ்வொரு அசைவுகளையும்
ரசிக்க நான் மறந்ததில்லை.

எனக்கான சந்தோஷத்தினை
மென்று விட்டு
வலிகளை மட்டும் விட்டுச்செல்கின்றாய்...

ஏழு கடல்களாயினும்
தாண்டி வருவேன்
உன்னை தாங்கிக்கொள்ள...

இவ்வளவு ,
காதலிக்கவில்லை உன்னை விட
வேறு யாரையும்
கை விடப்போவதுமில்லை
கல்லறைவரை உன்னை....

என் உயிரைப்பறிப்பதும் நீதான்,
பின், உயிர் கொடுப்பதும் நீதான்,

நடைப்பிணமான எனது பயணத்தில்
நீ தந்த பரிசுகள்தான்
நான் சுமக்கும் ஏக்கங்கள்...

கடைசிவரையிலும் என் முகம் பாராமல்
உன் பிடிவாதத்தின் மிச்சமாய்
என் அறையெங்கும் கண்ணீர்த்தடங்கள்..

உன் பிரிவை சுமக்க நேரிடுமாயின்
பிறந்திருக்கவே மாட்டேன்..

இறைவன் என்ன வரம் வேண்டுமென்றால்..?
ஏழு ஜென்மம்
உன்னோடு வாழ வேண்டுமென்பேன்...

நீ தரும் வலியை உணரும் தருணங்களில்
உன் கண்ணீரைத்தாங்கும்
என் கைகள்..

காலம் உனக்கானவனை கொண்டு தந்தாலும்
என் காதலையும், என்னையும்
கல்லறைவரை நீ சுமப்பாய்
என்பதே நிஜம்....

உன் உதடுகள் பொய் சொன்னாலும்
உன் உள்ளத்தால்
எனை நீ மறுப்பது சுலபமல்ல...

காத்திருப்பேன் உனை
எனை நீ சேரும் வரை...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (24-Oct-17, 12:19 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 117

மேலே