இயற்கையின் எழில்

தாமரைப் பூக்கள் நிறைந்ததோர் தடாகம்
பூமணிகளாய் மொட்டுக்கள் மலரும் நேரம் .
அதிகாலை வெய்யோனின் காதலியோ !
அழகாய்க் கதிரவனை நோக்கிடும் விழிகள் !
செந்தாமரையோ அலர்கின்றது தன் காதலனைக் காண .
சீற்றக் கதிர்களைப் பாய்ச்ச மயங்கும் மொட்டும்
முகம் காட்டத் துவங்க அக்காட்சியில் என்
மனமெங்கும் இன்பத்தில் துள்ளி விளையாட
பூவின் பனித்துளி கண்ணாடியாய் என் முகம் காட்ட
இயற்கையின் எழிலில் பறிகொடுத்தேன் நெஞ்சத்தை !!!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Oct-17, 5:16 pm)
Tanglish : iyarkaiyin ezil
பார்வை : 90

மேலே