வாழ்வே இது தானா

வானம் மூடிய இருள் போலே
என் வாழ்வில் சோகம் சூழ்ந்ததே
மண்ணில் விட்ட மீன் போலே
மணலில் விதைத்த பயிர் போலே
என் எண்ணம் யாவும் சிதைந்து போனதே
பெண்ணே ! உனக்காக கட்டிய என் மன வீட்டை
உன் கையால் கல்லெறிந்து உடைத்தாயடி
இத்தனை நாளும் என்கரம் பற்றிய உன் கை
இன்னொரு கரம் பற்றிப் போனதே
பெண்ணே உன் செயல் சரிதானா ?
காதலும் பொய் தானா ? காலமே இது மெய் தானா ?
என் வாழ்வு இனி கானல் நீர் தானா ?
வஞ்சிக்கும் பெண்களுக்கு உலகே நீ யொரு நீதி செய் !

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (26-Oct-17, 12:10 pm)
பார்வை : 265

மேலே