நம்பிக்கையின் நினைவூட்டல்

இருட்டில் மறைந்து வாழும் அனைவருக்கும் பொதுவாக நம்பிக்கையற்றவர்களாக உடைந்த இதயத்தோடு இருப்பவர்களே நன்றாக நினைவில் கொள்ளுங்கள்...

ஒவ்வொரு குழந்தையும், இளைஞரும்,
தங்கள் அச்சத்தை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களாய் தங்கள் கண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டுத் தூங்கிக் கொண்டிருப்பவர்களே சற்று விழித்தெழுங்கள்...

தங்களுடைய கனவைப் புதைத்து அடுத்தவரில் குற்றம் காண்பதிலேயே வாழ்க்கையை வீணடித்து தீமைக்குள் மாய்ந்து அதையே உண்மையென்று பரப்பும் அறிவாளிகளே! உண்மையின் உண்மையை அறிந்து கொள்ளுங்கள்...

நான் உங்களில் ஒவ்வொருவருக்கும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்..

நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள்..
நீங்கள் ஒரு நோக்கத்திற்காக இங்கே இருக்கிறீர்கள்;
இந்த இடத்தில் நீங்கள் தேவை..
நீங்கள் சிறப்பாக இருக்கிறீர்கள்..
நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்..

நீங்கள் குள்ளமா, உயரமா, என்ன
பாலினம் அல்லது என்ன இனம் ஆகியவை தேவையில்லை...

நீங்கள் தான் சரியான வழியில் இருக்கிறீர்கள்...
நீங்கள் விலைமதிப்பற்றவர்...
ஒரு அற்புதமான புதியவர்...
பலர் உங்களை மிகவும் மதிக்கிறார்கள்..
உங்களை விட முக்கியமான ஒன்று எங்கோ இருப்பதாய் தேடி அலையாதீர்கள் மூடர்களாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Oct-17, 6:11 pm)
பார்வை : 1993

மேலே