மன்னிக்கமாட்டாயா
மன்னிக்கமாட்டாயா???
***
மந்திரமாய் சாய்த்துவிட்டு
மன்னிக்க மறுக்கிறாய்
மறந்தேனும் எனை மன்னிக்கமாட்டாயா ?
உன் நினைவு உருவில் உடைந்து கிடக்கிறேன்
என் துகள்களை அள்ளிக்கொள்.
உனக்குள் என்னை மறைத்துவைத்து
மௌனமாய் கொலை செய்கின்றாய்.
மடி மீது உறங்க வைத்தாய்,
மார்போடு அனைத்துக்கொண்டாய்,
கனமான பொழுதுகளை
காதலை மாற்றித்தந்தாய்,
கனவுகளையெல்லாம் நிஜமாய்
கண்களிலே ஊற்றினாய்..
உன்னாலான மறக்க முடியாத பொழுதுகள்
ஒவ்வொரு கணமும்
நனைத்துப்போகின்றது
விழியன் ஓரங்களை.