இராதை கண்ணனுக்கு தந்த சேதி

அன்புறு அகப்படையே...
பண்புறு குணமுடையே...
கருணையுறு செயலுடையே...
ஒழுக்கமுறு உயர்வுடையே...

மென்மையுறு தென்றலே...
இனிமையுறு கீதமே...
நேர்மையுறு மணவாளனே...
பொறுமையுறு பூமியே...

பொறாமை இல்லாத சித்தனே...
ஆசை இல்லாத பித்தனே...
ஆனந்தம் தருவாய் எங்குமே...
அழிவில்லா ஆன்மனே...

கண்ணிழந்தோர்க்கு கண்களாய் காட்சி தந்திடுவதினாலே உன் நாமம் சொல்வேன் அழகுத் தமிழில் கண்ணனென்று...

கண்ணா வா...
கண்ணாய் வா...
கீதம் தா...
பசி, மோகம் மறந்திடும் கீதம் தா...

வழியறிதவருக்கு வழியாய் நீயானதாலே அழகுத் தமிழில் உலகென்ற தேரின் தேரோட்டி நீயென்பேன்...

தேரோட்டியே வா...
தேன் சிந்தும் குழல் கீதம் தா...

அன்பென்ற ஞான பிணைப்பு அனைவருக்கும் தந்து அன்பாய் நின்றதனாலே,
நீயே சிவனென்பேன்...

கருணை புரியும் சீவனே...
மறுசுழற்சி இயற்கையே...
உன்னை கண்டு காணாமல் சென்றால் நானொரு குருடி...
அகக் கண்கள் திறவாத மூடி...

மனதில் செங்கோலாட்சி புரியும் மன்னவா...
உன்னை மறந்தால் நானில்லை...
உன்னைப் பிரிந்தால் உயிரற்ற உடலாய் அழிவேன்...
என் மேல் சந்தேகம் கொள்ளுவதாய் நீ இசைத்த வார்த்தைகளே என்னை இரணப்படுத்தியதை நீ அறிவாயோ?
உன்னை தேடி வருகிறேன்...
நாடி வருகிறேன்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Oct-17, 4:00 pm)
பார்வை : 490

மேலே