தொலைந்து போன உறவு

எண்ணையில் போட்ட கடுகாய் நான்
என்னை தவிக்க வைக்கும் கழுகாய் நீ
துடிதுடித்து கதறியபடி இங்கே நான்
குறிவைத்து எனைத்தாக்க தயாராய் நீ
எனை காதல் நதியில் தள்ளாமல்
என் கண்ணிலிருந்து என்றோ நீ
தொலைந்து போயிருக்கலாம்..
தள்ளியது மட்டுமல்லாமல்
மேலே ஒரு பிரிவு எனும் பெருங்கல்லையும்
போட்டு விட்டாய்..
எனை விட்டு நீ போயே விட்டாய்..
உனை விட்டும் நான் தொலைந்து போகும் நேரம்
பக்கத்தில் எனை பார்த்து பரிகசிக்கிறது..
தப்பிக்க வழியேது..
பரிதவிப்பில் பரிதாபமாய் நான்..