அரசாங்க அதிபர் அபயசேகரா
பொன் குலேந்திரன் - கனடா
"வயலில் ஒவ்வொரு நெற் கதிரும்
காட்டில் ஒவ்வொரு இலையும் ,
அதன் பருவத்தின் முடிபில்
அதன் வாழ்வை மண்னில் முடிக்கிறது
அழகாகத் தோன்றிய அவை . "
இந்தக் கவிதை வரிகளை எழுதியவர் இலங்கையில் பீ எம் ஜி ( Post Master General) யாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரகவும் . இருந்து 2005 இல் அவுஸ்திரேலியாவில் காலம் சென்ற வேர்னன் அபயசெகரா என்பவர்
இந்த வரிகளில் இருந்து அவர் இலக்கியம், நாடகக் கலை வானொலி போன்ற துறைகளில் எவ்வளவு ஆர்வமும், திறமையும் உள்ளவர் என்பதை எடுதுக்காட்டுகிறது. குரல் வளம் உள்ளவர். இலத்தீன் பல மொழிகள் தெரிந்தவர் .
இலங்கையில் அரசாங்க அதிபரை தமிழ் நாட்டில் கலெக்டரோடு ஒப்பிடலாம். வேர்னன் அரசின் வாட மாவட்ட ஆட்சியாளர். அவரை கவ்ர்மேந்து ஏஜேன்ட் (Government Agent) என முன்பு அழைத்தார்கள் . இவரை வெளி நாட்டுக்கு மக்களை அனுப்பும் ஏஜேன்ட் என்று நினைகவேண்டம். அது ஒரு பெரும் மதிப்பு உள்ள பதவி. அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு,
கட்டளைக்கும் ஏற்றவாறு ஆட்சி செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு. காலபோக்கில் அரசில் இருக்கும் அரசியல் கட்சி தமக்கு விரும்பியவர்களே அரசாங்க அதிபரரக நியமித்தனர்
சில தசாப்தங்களுக்கு முன் 1962 முதல் 1967, வரை யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அரசாங்க அதிபராக இருந்தவர் வேர்னன் அபயசேகரா. இவர் பறங்கி இனத்தவர் கொழும்பு ராயல் கல்லூரியில் படித்து பல்கலைகழகம் சென்று, பட்டம் பெற்றவர் அவர். பிரித்தானிய ஆட்சியின் போது சிலோன் சிவில் சேர்விஸ் (Ceylon Civil service) பரீட்சையில் சித்தி அடைந்தவர். ஒரு காலத்தில் சிலோன் சிவில் சேர்விஸ்சில் இருபவர்கள் மட்டுமே
இந்த பதவிக்கு வரமுடியும். மாவட்ட அனைத்து பரிபாலானமும் அவர் கையில். அவரின் கீழ பல பரிபாலன சேவையில் சித்தியடைந்தவர்கள் அதிகாரிகளாக வேலை செய்தனர் அரசாங்க அதிபர் என்ற பதவியின் பெயர் அரசினால் காலப் போக்கில் மாவட்டச் செயலாளர் என மாற்றப் பட்டது
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராகவருவது என்பது படித்து பட்டம் பெற்று சிலோன் சீவில் சேர்விசில் சித்தியடைந்தவராக இருக்கு வேண்டும். பெர்சிவல் அக்லாண்ட் டைக் என்பவர் 1829 முதல் 38 வாருடங்கள் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராகஇருந்தவர் அவரே முதல் யாழ்ப்பாணத்து அரசாங்க அதிபர் . அவருக்குப் பின் இது வரை 59 அரசாங்க அதிபர்கள் இருந்திருக்குறார்கள்
பரிபாலன சேவையில் உயர் பதவி வகித்தவர் அக்காலத்தில் அரசியல்வாதிகளின் ஆதி;க்கம் குறைந்த காலமது. அரசாங்க அதிபருக்கு பெரும் மரியாதை இருந்தது. அரசியல் இந்த நிலையை இப்போது மாற்றிவிட்டது, ஒரு அரசாங்கத் திணைக்களத்தின் உயர்ந்த பதவி செயலாளர் பதவியாகும். அவரின் ஆலோசனையை அமைச்சர் அனேகமாக பெறுவது முறை. அனால் காலப்போக்கில் பரிபாலன சேவையிலிருந்தவர் வகித்து வந்த பதவி, அரசியல்வாதிகளை நியமிக்கும் அளவுக்கு மாறிவிட்டது, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் சிவில் சேவிஸ் சேவை 1883ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் ஆங்கிலேயர்களே பெரும்பாலும் இச்சேவையில் பதவி வகித்தார்கள். நான் யாழப்பாணத்திலும் கொழும்பிலும் அரசாங்க சேவையில் கடமையாற்றிய போது சந்தித்த முகங்களில் சிலோன் சிவில் சேர்விசில் கடமையாற்றியவரும் கலையுலகில் ஈடுபாடுள்ள அபயசேகராவை என்னால் இன்றும் மறக்க முடியாது. இவர் பரங்கி இனத்தவர். கொழும்பு றோயல் கல்லூரியில் படித்தவர். காலி, பொலனறுவை பகுதிகளுக்கு அரசாங்க அதிபராக இருந்தவர். நாடகத்தில் ஈடுபாடுள்ளவர். “பெண் பாவை” என்ற நாடகத்தை இயக்கியவர். ஐந்து வருடங்கள் இங்கிலாந்தில் உயர் தாபனத்தில் கடமையாற்றிய பி;ன்னர் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக மாற்றலாகி பதவி ஏற்ற பின்னர் இவருடைய அறிமுகம் எனக்கு அதிகம் கிட்டியது. அப்பதவியில் ஓய்வு பெறுமட்டும்; வேலை செய்தவர்,; வேர்னன் எனப் பலரால் அழைக்கப்பட்டவர, , பல மொழிகள் தெரிந்தவர்.
அவர் ஆங்கிலத்தில் எழுதிய யாழ்பாணத்து படிமங்கள் ( Images of Jaffna) என்ற நூலை எனக்குத் க்குத் தந்து வாசித்து பார்க்கும் படி சொன்னார். அதில் தான் யாழ்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் தான் சந்தித்தவர்களையும் தன அனுபவத்தையும் எழுதியிருப்பதாகச் சொன்னார்.
அவர் என்னோடு உரையாடும் போது யாழ்ப்பாண வாழ்க்கையைப் பற்றி பல விடையங்களை நகைச்சுவையாக சொன்னார். வதந்திகள் பரப்புவதிலும், ஒருவரைபற்றி குறை சொல்வதிலும், குறை கண்டு பிடிப்பதிலும் , பெட்டிசன் போடுவதிலும். சாதி, கௌரவம் பார்ப்பதிலும் யாழ்ப்பாணவாசிகள் கைதேர்ந்தவர்கள் என்றும், உயர்பதவி வகிப்பவர்களைத் தமது கையுக்குள் போட்டுக் கொள்ளவேண்டும் என்ற நோக்கமுள்ளவர்கள் என்பதுமாகும் . சம்திங் கொடுத்து தமது காரியத்தை செய்து முடிக்க தயங்க மாட்டார்கள். நேரபரிபாலனம் என்பது அவர்களுக்கு வெகுதூரம். பழைய மூட நம்பிக்களை விடாதவர்கள். தீவு மக்களை சற்று குறைவாகவே பார்ப்பார்கள்.
ஒரு சமயம் வேர்னன் அரசாங்க வேலையாக, வீடுகளை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்க வேண்டி இருந்தது. அதனை மாலை ஐந்து மணிக்கு பாசையூர் பகுதியில் ஆரம்பித்து வைப்பதாக அவர் தனது டயரியில் குறித்திருந்தார். ஐந்து நிமிடங்களுக்கு முன்பே தனது உதவியாளரான நடராஜா என்பவரோடு அந்த இடத்துக்கு வேர்னன் போய்விட்டார். மக்கள் வந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தார். ஒருவரையும் காணவில்லை. வேர்னனை வரவேற்க சில காகங்களும், சில சொறி நாய்களும் தான் வந்திருந்தன. ஒரு சிலர் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுயிருந்தனர் பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர் மக்கள் ஒவ்வொருத்தராக வரத் தொடங்கினார்கள் . இறுதியாக திறப்பு விழா ஐந்தரை மணிக்கு ஆரம்பமாகியது.
வேர்னனுக்கு சரியான கோபம் வந்தது. தமிழரான தனது உதவியாளருடன் வேடிக்கையாக கேட்டார் “என்ன நடராஜா தமிழர்களின் நேரக் கலாச்சாரம் இது தானா?
“சேர்!... கலியாணவீட்டுக்கோ அல்லது வேறு வைபவங்களுக்கோ குறிப்பிட்ட நேரத்துக்கு அவர்கள் அனேகமாக போவது கிடையாது. தாம் தாமதித்து போனால் பலர் கவனத்தை ஈர்க்கமுடியும் என்பதும் ஒரு காரணம். இரண்டாவது உணவு கொடுக்கும் நேரம் பார்த்துப் போவார்கள்.”
உயர் பதவிகளில் இருக்கும் பொது ஒரு கடினமான பிரச்சனையின் போது முடிவு எடுப்பதற்கு சாணக்கியம் அவசியம் தேவை. அதுவும் அரசியல்வாதிகளின் ஈடுபாடு அப்பிரச்சனையிலிருந்தால் பேசத் தேவையில்லை.
வேர்னன் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் மாவிட்டபுரம் கோயிலுக்குள் சாதி குறைந்தவர்கள் செல்லக்கூடாது என்ற பிரச்சனை தலைதூக்கியது. அதற்கு தூண்டுகோலாக இருந்தவர் இளைப்பாரிய கணித பேராசிரியர் சுந்தரலிங்கம். இவர் அரசியல்வாதியும் கூட. அப்போது பொலீஸ் அதிகாரியாக இருந்தவர் சுந்தரலிங்கம். இரு சுந்தரலிங்கங்ளுக்கும் போட்டி. பேராசிரியர் ஒரு பிடிவாதக்காரர். அரசியல்வாதி. வவுனியா பகுதிக்கு எம்பியாக இருந்தவர். அடங்காத் தமிழர் முன்னணி தலைவர். அவர்கள் இருவரையும் சமாளிப்பது என்பது வேர்னனுக்கு போதும் போதும் மென்றாகிவிட்டது. ஒரு கூட்டத்தில நகைச்சுவையாக, இரு (sun) சூரியன்ளுக்குமிடையே சண்டையை தீர்த்து வைப்பது எனக்குச் சரியாக சூடுபிடித்துவிட்டது என்றார். எல்லோரும் வாய்விட்டு சிரித்து அவரது நகைச்சுவையை இரசித்தார்கள்.
இன்னொரு கட்டத்தில் யாழ்ப்பாண எம்பி ஜீ ஜீ பொன்னம்பலத்தை சமாளிப்து ஒரு தலையிடி. பிரபலயமான வழக்கறிஞர். பேச்சாளர். பிரதமராக இருந்த ட்ட்லி செனநாயக்கா யாழ்ப்பாணம் வர இருந்தபோது, அவருக்கு முதன் முதலில் தான் மாலையிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் ஜீ ஜீ பொன்னம்பலம். அதெப்படி முடியும்?. நான் தான் பலாலி எயர் போர்டடு இருக்கும் பகுதிக்கு எம் பி. ஆகவே அது என் உரிமை என்றார் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம். இரு கட்சி தலைவர்களுக்கும் அரசியலில் பலத்த போட்டி. பிரச்சனையை பிரதமருக்கு வேர்னன் எடுத்துச்சொன்னார். பிரதமரின் அனுமதியோடு ஜீ ஜீ யை பிரதமர் வரும் விமானத்தில் வருவதற்கு ஒழுங்கு செய்து பிரச்சனையைத் திர்த்து வைத்தார் வேர்னன்.
வேர்னன் போஸ்ட் மாஸ்டர் ஜெனராலாக இருந்த காலக்கட்டத்தில தொழிற்சங்கங்களை கட்டுப் படுத்துவது கடினம். வேர்னனுக்கு சி;ங்களம் அவ்வளவுக்கு பேச வராது. அந்த குறையை பெரிதாக்கி தமக்கு சாதகமாகப் பயன்படுத்த பார்த்தார்கள் தொழிற்சங்கங்கள். மேலதிக நேர வேலை Over Time) செய்தால் அதற்கான ஊதியத்தை அதிகரித்து அவர்களை தமது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிவிட்டார் வேர்னன்.
இன்னொரு மீட்டிங்கில் ஒரு தொழில் சங்கத் தலைவர் வெர்னன் ஆங்கிலத்தில் மீட்டிங் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார. அவர சொன்னார் நக்கலாக” சார் சிங்களம் இலங்கையின் அரச மொழி. தமிலும் ஆங்கிலமும் இரண்டாம் மொழி. ஆகவே சிங்களத்தில் பேசுங்கள்” என்று
அதற்கு வெர்னன் சிரித்து விட்டு.சொன்னார் . “ உமக்கு சிங்களம் மட்டுமே தெரியும் எனக்கு பல மொழிகள் தெரியும். அதனால் எந்த நாட்டிலும் நான் வேலை செய்யமுடியும். உம்மால் இலங்கையில் மட்டுமே வேலை செய்ய முடியும்:” என்று சொல்லி அவருக்கு ஒரு குட்டு வைத்தார். எல்லோரும் வாய் விட்டுச் சிரித்தார்கள். தொழில் சங்கத் தலைவர் தலை குனிந்தார்
வெர்னன் நாடகக் காலையில் ஆர்வம் கொண்டவர். யாழ்பாணத்தில் “பெண் பாவை” என்ற நாட்டிய நாடகத்தை அவறர் அரசாங்க அதிபராக இருந்த பொது மேடடை ஏற்றினர். இலங்கை வானொலிக்கு சில காலம் டைரக்டராக வேலை செய்தார். லண்டனில் உள்ள உயர் ஸ்தானிபர் அலுவலகத்தில் முதலாம் செயலாளராக சில வருடங்கள் வேலை செய்தார் .
தனக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் அன்பும் மரியாதையும் வைத்திருந்தது அவரின் முக்கிய குணம். ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தலில் தோழ்வியடைந்த போது, வேர்னனுக்கு பரிபாலனம் செய்வது கடினமாகிவிட்டது. ரிட்டயராகிய பின்னர் பறங்கி இனத்தவர் என்பதால் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து செல்ல அவருக்கு இலகுவாயிற்று. அங்கு போனாலும் இலங்கை பிரஜாயுரிமையும், கடவுச் சீட்டையும் அவர் மாற்றவில்லை . மேல்பேர்ன் நகரில் வாழ்ந்த அவர் அங்குள்ள ஒரு வானொலில் நகழ்ச்சி நடத்தினார். எண்பத்தைந்து வயதில் 2005 யில் காலமானார்
*****