அம்மு சின்னு கதைகள் - 3 தாயா

அம்மு சின்னு கதைகள்

அம்மா என்கிற அம்முவிடம் சின்னு என்கிற ஐந்து வயது சின்ன பையன் ஒருவன் பேசுகிற சுவாரஸ்யமான குழந்தைத்தனமான உரையாடலை சுமந்து வருகிறது இந்த கதையின் ஒவ்வொரு பகுதியும் .

சின்னுவுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும்.அம்மாவுக்கு சின்னுவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அம்முவுக்கு தன பிறந்த நாளை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவளின் பிறந்த நாளை விட சின்னுவின் பிறந்த நாளைத் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் அன்று தானே அவள் அம்மாவாக பிறந்ததாள் அந்த இரு குட்டிக் கண்களை முதல் முதலில் பார்த்த நாள் அன்று தானே. அந்த கண்களின் மேலான அம்முவின் காதல் வருடம் கடந்தும் இன்னும் இன்னும் ஆழமாய் ஆகிக்கொண்டே .

அம்மா: சின்னு வாடா நேரமாச்சு தூங்கலாம் ஓடி வா
சின்னு: போ மா நான் வரல
அம்மா : ரொம்ப லேட்டா ஆயிடுச்சு நாளைக்கு விளையாடலாம் வா டா
சின்னு : ம்ம்ஹ்ம்ம் விளையாட விடவும் மாட்டாங்க ...சும்மா தூங்கு தூங்கு னு சொல்லிட்டே இரு இருப்பாங்க
அம்மா : இப்போ வரியா இல்லையா
சின்னு :👿 ( கோபம் கொஞ்சம் கோபத்தோடு ) ஏன் மா விளையாட விடாம டார்ச்சர் பண்ற
என்னை
அம்மா : என்ன டா பாசமா பேசாம இப்படி பேசுற , நான் உன் தாய் லா டா ..
சின்னு : அம்மாஆ நீ டாய் ஆ
அம்மா : ஹி ஹி தாய் டா விளையாட்டு டாய் னு நினைச்சிடியா (அடக்க முடியாதா சிரிப்பு ) அது இல்ல டா
சின்னு : அப்ப தாய் னா என்னம்மா
அம்மா : ஐயோ செல்ல குட்டி தாய் னா அம்மா
சின்னு : ஆஆ அம்மாவா
அம்மா : ஆமா டா செல்ல குட்டி ( அம்மாவின் அணைப்புக்குள் சின்னு வந்தாச்சு இப்போது )
சின்னு : அம்மா கதை சொல்லுமா
அம்மா : படு சொல்றேண்டா தங்கம்
சின்னு : ஓகே ஓகே படுக்கறேன் சொல்லுமா ... ம்ம்ம் யோசிச்சுட்டு கதை சொல்லு அம்மா .. இல்ல இல்ல கதை சொல்லு தாயே
அம்மா : சிரிச்சுகிட்டே சரி மோனே .. ஒரு ஊர்ல ஒரு ...

ஒரு ஊர்ல ஒரு என்று அவள் ஆரம்பித்த கதையில் ஆயிரம் கேள்விகள் கேட்டு விட்டு அயர்ந்து தூங்க தொடங்கியிருந்த அந்த குட்டி முகத்தில் அழகாய் மூடிய இரு பிறை நிலவுகளையும் அவள் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன காதலோடு

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (4-Nov-17, 5:50 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 423

மேலே