சிடுமூஞ்சி சித்தப்பா
![](https://eluthu.com/images/loading.gif)
சிடுமூஞ்சி சித்தப்பா இது என் அப்பாவின் தம்பி மனோகருக்கு நான் வைத்த பெயர். ஒரு காலத்தில் வில்லானாக சினிமாவில் நடித்த மனோகரின் தோற்றம். அரும்பு மீசை. அதட்டும் குரல் அதே போன்று . என் சித்தப்பாவுக்கு இருந்தது.. எப்போதும் சிடு சிடுத்த முகம். முகத்தில் சிரிப்பையோ புன்னகையோ காண முடியாது. வெறுக்கும் பார்வை. அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை . வயது முப்பத்தையின்து. என் அப்பாவுக்கும் பார்க்க பத்து வயது அவர் இளமை. ஒரே தம்பி என்ற படியால் என் அப்பா அவர் போக்கை பொறுத்துக் கொள்வார். என் அம்மாவும் அப்படித்தான் அப்பா விரும்புவதையே செய்வாள்.
சித்தப்பாவுக்கு தான்.பொருளியளில் எம்ஏ பட்டம் பெற்றவரன் என்ற பெருமை வேறு . இப்பவும் பல நூல்களைப் படித்த படியே இருப்பார். .அவருக்கு என்று எங்கள் வீட்டில் தனி அறை. அவருக்கு விருப்பமான மாமிம்;, மீன் உணவை என் அம்மா தயாரித்து கொடுப்பாள். அவர் விரும்பிய சாப்பாடு இருக்காவிட்டால் அவ்வளவு தான். சாபிடாமல் முகத்தை நீட்டிக் கொண்டு எழும்பிப் போய் விடுவார்.
என் அப்பா எந்தனையோ கலியாணங்களை அவருக்குப் பேசி வந்தார். ஆறு பெண்களைப் போய் பெண் பார்த்தும் கலியாணம் சரிவரவில்லை ஒருவேலை இவரின் சிடுமூஞ்சியையும் பேச்சையும் பார்த்து பெண்கள் இவரை வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். சித்தப்பாவுக்கு வீட்டில் என்னோடு சண்டை. நண்பர்களோடு சண்டை. ஆபீசில் சண்டை. என்ன குணமோ அவருக்குத் தெரியாது.
டாக்டரின் ஆலோசனைபடி ஒரு ப்ளட்பிரஷர் மெஷின் வாங்கி தன்னை தினமும் செக் செய்து கொள்வார். . கோபத்தில் விஸ்வமித்திர ரிஷியையும் வென்று விடுவார் இரண்டு நிறுவனங்களில் இடங்களில் நல்ல பதவியில் இருந்து ,தன்னோடு வேலை செய்த இருவரோடு தகாத வார்த்தைகளால் பேசியதாலும் அவர்களை அடித்ததாலும் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார்
.அன்று சனிக்கிழமை. ஹோம் வொர்க் செய்துகொண்டிருந்த என்னை “ டேய் ஜே இங்கை கெதிலை வா” என்று உரத்த குரலில் சித்தப்பா கூப்பிட்டார். அவரின் அறைக்குப் போனேன் “
அம்மாவும் அப்பாவும் என்னை ஜெயம் என்று தான் கூப்பிடுவார்கள். இவர் மட்டும் ஜே என்று சுருக்கிக் கூப்பிடுவார் சில சமயங்கலளில் டேய் என்றும் கூப்பிடுவர் . அவர் கூபிட்ட தொனியில் இருந்து அவர்கோபமாக இருக்கிறார் என்று எனக்குத் தெரிந்தது.
“ என்ன சித்தப்பா ஏன் என்னை கூப்பிடுகிறியல்”? என்று கேட்டவாறு அவர் ரூமுக்குள் போனேன்,
அவர் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது. ஏதோ நடக்கக் கூடாதது ஓன்று நடந்து விட்டது போல் எனக்குத் தெரிந்தது
“நீ நான் இல்லா சமயம் என் ரூமுக்குள் வந்தனியா?
:” இல்லையே . சித்தப்பா. நான் என் வரவேண்டும்”?
“ போய் சொல்லாதே. நான் வாய்த்த சாமான்கள் அந்த அந்த இடத்தில் இல்லையே “ எனக்குத் தெரியாது சித்தப்பா “
:”. உணமையை சொல்லுவியா இல்லையா . “ என்னை அடிக்க கையை ஓங்கினார்
“உண்மையை தான் சொல்லுறேன் சித்தப்பா” என்று சொல்லி ஓதுங்கி நின்றேன்:
“ பொய் சொல்லவும் பழகிட்டாயா ”?
“நான் ஒரு போதும் போய் சொல்வதில்லை. எனக்கு உங்கள் அறையில் ஒரு தேவையும் இல்லை”.
எங்கள் வாக்கு வாதத்தை கெட்’ட அம்மா அறைக்குள் வந்ததை கண்டு அவர் கோபம் சற்று தணிந்தது
” அண்ணி நீங்கள் என் அறைக்குள் வந்த நீங்களாநீ”?
“ ம்.. வந்தனான் . உன் அறை ஒரே குப்பையாய் இருந்தது. அறையை .தூசி தட்;டி , கீழே கிடந்த உன் புத்கங்களை ஒழுங்காக அடுக்கி வைத்தனான். அது பிழையா:?.
“:பராவியில்லை அண்ணி . ஆனால் எனக்குச் சொல்லிவிட்டுச் செய்திருக்கலாமே”
“மனோகர், நீ தான் வீட்டில் இல்லையே . நீ வரும் மட்டும் உன் அறை குப்பையை ஒதுக்காமல் என்னால் இருக்க . முடியாது” என்று பதில் சொல்லி விட்டு அவள் போய் விட்டாள்.
நான் சித்தப்பாவை பார்த்துச் சொன்னேன். “:சித்தப்பா நீங்கள் முன் பின் தெரியாமல் பல தடவை என் மேல் குற்றம் சொல்லி பேசி இருக்கிறியள். இது சரியான பிழை.”.
“சரி நீ போ” என்று சுருக்கமாக அவரிடம் இருந்து பதில் வந்தது. . அவரிடம் மன்னிப்பு கேட்கும் குணம் இல்லை.
*****
“உங்களைத் தான் அத்தான் . இனி எவ்வளவு காலம் உங்கடை அருமை தம்பியின் போக்கைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். கெதியிலை மனோகருக்கு ஒரு கலியாணம் செய்து வையுங்கள் அபோதாவது அவன் குணம் மாறட்டும்” என் அம்மா அப்பாவுக்கு சொன்னாள்..
“நான் என்ன பாக்கியம் செய்ய ? அவன் குணம் அறிந்து ஒருவரும் அவனுக்குப் பெண் கொடுக்க வருகினம் இல்லை”
“நான் ஒன்று சொல்லட்டுமா அத்தான் ”
“சொல்லு “
“ உங்கடை ஊரிலை உங்ளுக்கு தூரத்துச் சொந்தத்தில் ஒரு வாயாடி பெண் ஒருத்தி இருக்கிறாள் என்று சொன்னியளே. நினைவு இருக்கிறதா“?
“நீ யாரை சொல்லுறாய் பாக்கியம் “?
“ வேறு யார்? . உங்கடை பெரியமாவின்டை மருகளின் சித்தப்பாவின் மகளைத் சொல்லுறன். அவள் பெயர் பைரவி. பெயருக்கு ஏற்ற குணம் அவளை. ஒரு தடவை ஊரிலை நடந்த உங்கடைபெரியமாவின் இளைய ,மகனின் கலியாணத்தில் பார்த்த நினைவு எனக்கு. வால் சரியான வாயாடி. ஆனால் . படித்த பிஸ்சி பட்டதாரி என்று உங்கடை சின்னம்மா சொன்னா. அவளை மனோகருக்குப் பேசி முடித்தால் என்ன?. கொஞ்சம் பசை உள்ள இடம் தான். சொந்தத்துக்குள்ளை என்ற படியால் சாதி, சனம் பார்க்கத் தேவை இல்லை. பெட்டையும் ஓரளவுக்கு வடிவு. பொது நிறம் இவனை விட கொஞ்சம் உயரம் அவ்வளவு தான் ” பாக்கியம் சொன்னாள்
“ நீர் நல்ல ஞாபகசக்திக்காரி. அவள் பைரவி ஒரு சயன்ஸ் டீச்சர். என்று எனக்கு தெரியும் அம்மாவோடை பேசிப் பார்க்கிறேன்.”
“ உங்கடை அம்மா சொன்னால், மனோகர் கேட்பான். அவனைத் திருத்த பைரவி தான் பொருத்தமானவாள் என்று என் மனசு சொல்லுது”
“ ஏதோ என் தம்பிக்கு கலியாணம் நடந்தால் நல்லது தான்”
*****
என் அம்மா பாக்கியம், எடுத்த காரியத்தை முடித்து வைப்பதில் கெட்டிக்காரி. அவள் எங்கள் டவுனில் உள்ள மகளிர் சங்கத்தின் தலைவி வேறு .தன் கெட்டித்தனத்தால் பல குடும்பப் பிரச்னைகளை விவாகரத்தில் போய் முடியாமல் தீர்த்து வைத்தவள். என் அப்பா அவவின் பாவாடைக்குள் என்று என் சொந்தக் காரர்கள் சொல்லுவதைக் கேள்விப் பட்டிருகிறேன்
எனக்கு பைரவி சித்தியைப் பிடித்து கொண்டது. நான் கணிதம் , பௌதிகம், ஆகிய பாடங்களில் கொஞ்ச வீக். சித்தி எங்கள் குடும்பதுக்குள் வந்த பிறகு அவளின் உதவியோடு நான் அந்த இரு பாடங்களிலும் அதிக மார்க்ஸ் எடுக்க முடிந்தது. அவள் கொஞ்சம் வாயாடி தான்.. தனக்கு எது சரிஎன்று நினைக்கிறாலோ அதில் இருந்து மாற மாட்டா. . ஆனால் என்னோடு அன்பாக நடப்பாள். அவள் சொன்ன வேலைகள் எல்லாம் நான் மறுக்காமல் செய்வேன். என் அம்மாவையும் அப்பாவையும் மதித்து நடந்தாள்.
சித்தி நல்ல சமையல்காரி. அவள் வந்த பின் வாரத்தில் சனி ஞாயிற்றுக் கிழமைகளை விட மற்று ஐந்து நாட்கள் வீட்டில் மரக்கறி மட்டுமே சமையல் . எல்லா நாட்களிலும் மீன், முட்டை , இறச்சி தேவைப்பட்ட சித்தப்பாவையும் ஐந்து நாட்கள் மரக்கறி சாப்பிடும் அளவுக்கு மாற்றி விட்டாள் சித்தி. அவரின் சிகரெட் குடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தி விட்டாள். என் அம்மாவைப் போல் சித்தி துப்பரவு பார்பவள். தினமும் வேலைக்குப் போகமுன் சித்தப்பா குளித்தி சீராக ஆடை அணிந்து போக வேணும். மாலை நேரத்துக்கு வேலை முடிந்து வீடு திரும்பவேண்டும் காலையில் தாமதித்து எழும்பும் சித்தப்பாவில் திருமணமாகி ஆறு மாதத்துக்குள் ஒரு மாற்றம். காலையில் ஆறு மணிக்கே எழும்பப் பழகி விட்டார்
சித்தப்பா அடிக்கடி கை கழுவ வேண்டும். என்னை ஜெய் என்று கூபிடுவதி நிறுத்தி ஜெயம் என்று கூப்பிடத் தொடங்கினார் ன்கினர் இதை எல்லாம் சித்தப்பா முன்பு செய்யவில்லை. அவரின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டது . சிடுமூஞ்சித் தனம் படிப்படியாக் குறைந்தது. என்னோடு அன்பாகப் பேசத் தொடங்கினார்
சித்தி வந்த அதிர்ஷ்டமோ என்னவோ அவருக்கு அரசாங்கத்தில் திட்டமிடும் இலாக்காவில் உயர் அதிகாரியாக வேலை கிடைத்தது. அவருக்கு சித்தியின் பெற்றோர் ஒரு ஹோண்டா மோட்டார் சைக்கில் வாங்கிக் கொடுத்தார்கள். அதில் சித்தப்பாவும் சித்தியும், மாலையில் பீச்சுக்குப் போவதை கண்டு நானும் என் பெற்றறோரும் சந்தோஷப்பட்டோம். எனது பதினாறாவது பிறந்த நாளுக்கு சித்தப்பாவும் சித்தியும் எனக்கு ஒரு லப்டோப் ஓன்று வாங்கித் தந்தார்கள். நான் அதை எதிர்பார்க்கவில்லை.
“.பாக்கியம் பார்த்தாயா என் தம்பி மனோகரில் உள்ள மாற்றத்தை. முந்தி வேலை இல்லாத விரக்தியும், முன்பு அவன் சாப்பிட்ட உணவும் தான் அவனின் சிடு மூஞ்சித் தனத்துக்குக் காரணம். அதை பைரவி மாற்றி விட்டாள். அவளின் வாயாடித்தனம் இப்போ இல்லை அவளுக்கு என் பாராட்டுக்கள். அதோடு உனக்கும் என் பாராட்டுக்கள் “ என்றார் அப்பா.
“ எனக்கு ஏன் பாராட்டுகள்”?
“நீர் தானே பைரவியை மனோகருக்கு தேர்ந்து எடுத்தவள்”
“ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்றாள் அம்மா
*****
.
.
”.