காற்று வாங்கப்போனேன்
வாய் விதைக்கிறது
செவி அறுவடை செய்கிறது
கோபம் நட்டம்
புன்னகை லாபம்
பொய்யை பொய்யால்
காப்பாற்ற இயலாது
உண்மை தனித்தே வெல்லும்
மூடநம்பிக்கை
விளக்கில்லா இருட்டில்
இலக்கில்லா பயணம்
பிறர் உழைப்பில் வாழ்பவன்
சோம்பலின் எஜமான்
பொறுமை அடக்கம்
நல்லொழுக்கம்
ஆண்களின் அக அணிகலன்கள்
இளமையில் உழைக்காவிட்டால்
முதுமையில் யாசிக்கவேண்டும்
தீயபழக்கம் இளமையிலேயே முதுமை
சிக்கனம்
இல்லத்தரசிகளின் சம்பளம்
சிரித்தமுகம்
இல்லத்தரசிகளின் அணிகலன்
இலைகளெல்லாம் கனிகளாக
மாறநினைத்தால் மரம் செழிக்காது
மலைகளெல்லாம் சிலைகளாக
மாறநினைத்தால் விலைபோகாது