மனமே என் மனமே

மனமே மயங்காதே, மனித மந்தை கண்டு,
மனமே பதறாதே, இப்பாரின் நிலை கண்டு,
மனமே ஏங்காதே, பிறர் நிலை கண்டு,
மனமே மாறாதே, மாந்தர் மாற்றம் கண்டு,
மனமே தாழாதே, தீயோர் செயலை கண்டு,
மனமே சிரிக்காதே, நல்லோர் வீழ்வதை கண்டு,
மனமே அழுகாதே, அந்நியர் அநீதி கண்டு,
மனமே ஏமாறதே, ஏமாற்றும் கயவனை கண்டு,
மனமே அடங்காதே, அதிகார அயோக்கியனை கண்டு.

மனமே அடங்கி விடு, அன்பின் செயலை கண்டு,
மனமே ஏமாந்து விடு, சிறு குழந்தையின் விளையாட்டில்,
மனமே அழுது விடு, அன்பிற்கு இனியவர்களை இழக்கையிலே,
மனமே சிரித்து விடு, இன்ப தருணங்களிலே,
மனமே தாழ்ந்து விடு, உனக்கு உதவியவர் முன்னிலையிலே,
மனமே மாறி விடு, உன் தீய எண்ணங்களில் இருந்து,
மனமே ஏங்கி விடு, நல்ல எண்ணங்களில் இருந்து மாறாமல் இருக்க,
மனமே பதறி விடு, உன் தன்மானத்திற்கு சோதனை வருகையிலே,
மனமே மயங்கி விடு, உன் உண்மை காதலிடமே!!

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (5-Nov-17, 1:50 am)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
Tanglish : maname en maname
பார்வை : 427

மேலே