கேளடி பெண்ணே

ஆயிரம் உண்டு ஆசைகள்
அன்பே உன்னிடம் பேசிட

நட்சத்திரம் கொஞ்சம் பாரடி
என்னுள் உன் நினைவுகள்
அது சொல்லுமே

கோவிலை தேடி நடக்கிறேன்
கடவுளாய் எதிரில் வருகிறாய்

மூக்குக்தி அழகு போதுமே
உன் பூனைக்குறும்பும்
என்னைக் கொல்லுதே

வேதனை செய்து பார்க்கிறாய் -என்னுள்
விளையாட உனக்கு ஆசையா

மௌனமே இது போதுமே
மல்லி வாசமும் என்னைக் கொல்லுதே

தேரடி வீதியில் நடக்கிறாய் -என்னுள்
திருவிழா அது நடக்குதே

தென்றலாய் வீசி போகிறாய்
பூகம்பம் தெருவில் தெரியுதே

ஊஞ்சலில் நீயாட
பம்பரம் நானானேன்

உயரத்தில் நீ பறக்க
விண்வெளி நானானேன்

மண்ணிலே உன்னை வைத்தேன்
மரமாய் நீயும் வந்தாய்

என் நெஞ்சிலே உன்னை வைத்தேன்
என் நிழலாய் நீயும் வந்தாய்

பூவிலே இருக்கும் சிறு தேன்துளி போல்
உன் இதழிலே என்னை வைத்தாய்

புதுப்புது கவிதை நான் வரைய
வார்த்தையாய் நீயும் வந்தாய்

மல்லிகை கூந்தல் பெண்ணே - உன்னால்
மயங்கி விழுந்தேனடி
மாதம் முப்பது நாளும் -அந்த
மயக்கம் தெளியாதடி.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (5-Nov-17, 6:15 pm)
பார்வை : 252

மேலே