அம்மா

உருவாக்க முடியததற்கு....
உருவம் கொடுத்தவளே……
கனவாகிய கருவை
காட்சியாக்கியவளே…….......
தனி மரமாய் - நான்
தனித்திருந்தாலும்.....உன்
ஆணிவேரின் அசைக்க முடியா
நம்பிக்கையில் வீற்றிருக்கும்
என் உள் மனசின் ஆழமாய்
நான் மண்ணைத்தொட்டு
அம்மா…….. என்றழைக்கும் முன்னே
நீ விண்ணைத்தொட்டு போய்விட்ட
உன் நினைவைக் கூட………….
புரிந்திடாத முடவனாகிப்போன
உன் முடிவுரையை
தனிமரமான அனல் காற்று
எப்போதும் வீசிச் சொல்லுமம்மா.

எழுதியவர் : THANGA MURUGAN (6-Nov-17, 11:33 am)
பார்வை : 1287

மேலே