இந்தியக் குடி மகனே
இந்தியக் குடி மகனே
உன் குடியால் உன் குடியை ஏன் கெடுக்கின்றாய்?
மாயை கண்டு மதிமயங்கி ஏன் செல்கின்றாய்?
உன்னையே மறந்து நீ தள்ளாடி தள்ளாடி விழுகின்றாயே
நேசமிகு உன் குடும்பத்தை சீர்குழைத்து
பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைத்து கனவுகள் சிதைந்து
வாழ்கின்றனவே எதனாலோ?
உன்னை நம்பிய உறவுகளை ஊசலாட விட்டுச் செல்லும் குடி மகனே
உன் நிலை உணர்ந்து மாறுவது எப்போது?
அகம் தெளிந்து மனிதனாய் மாறுவது எப்போது?
உன் உள்ளார்ந்த மாற்றித்திற்காக
ஏங்கித் தவிக்கும் உறவுகள்
கிடக்கவே உணர்வது எப்போதோ?
இந்தியக் குடி மகனே