அவள்
பார்த்தேன் அவள் சிரித்தாள்
அது புன்சிரிப்பு , அது தந்து
அவள் சென்றுவிட்டாள்
அந்த சிரிப்பின் அர்த்தம் புரியாது
நாளை அவள் அங்கு வந்தால்
கேட்டடிடலாமா என்று நினைத்து
மறுநாளும் அவளைத்தேடி அதே இடம்
சென்றடைந்தேன் ஆவலுடன்
அவளும் வந்தாள் ஆனால் இப்போது
அவளுடன் அவள் கையைகோர்த்து
ஓர் இளைஞனும் ; இப்போதும் என்னை
நோக்கி அவள் சிறுநகைப் புரிந்தாள்
அந்த நேற்றைய சிரிப்பும் இன்றைய
அவள் சிறுநகையும் இப்போது எனக்கு
புரிந்தது ................ஓர் விஷமசிரிப்பென்று
'எனக்கு என்னவன் ஒருவன் இருக்கின்றான்'
என்று கூறியது அந்த சிரிப்பு !
நானும் நம்பிக்கை இழக்கவில்லை
நாளை எனக்கென்று ஒருவள் வாராது போவாளா
தேடுவேன்...........என்று எனக்குள் கூறிக்கொண்டு
அங்கிருந்து விலகிச்சென்றேன்
இப்போது நான் அவளை பார்க்கவில்லை !

